கேள்வி எண் 36 - சட்டக்கேள்விகள் 100
36. B.Pharm படிக்காமல் மருந்துக்கடை வைக்கலாமா?
நான் எனது இடத்தை மருந்துக்கடை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளேன். ரெண்ட் அக்ரிமெண்டில் கடை லைசென்ஸ் ஜெராக்ஸ் ஒவ்வொரு வருடமும் தர வேண்டும் என உள்ளது. இதுநாள்வரை தரவில்லை. கடையில் பார்வையில் படும்படி வைக்கவில்லை. விசாரித்ததில், ஒரு பார்மசிஸ்ட் பெயரில் டிரக் லைசென்ஸ் வாங்கி நடத்தி வருகிறார் எனத் தெரிகிறது. நான் கேட்டதற்கு நாம் இருவரும் வாடகை அக்ரிமெண்ட் போட்டுள்ளோம். ஆனால், பார்மசிஸ்ட் பெயரில் லைசென்ஸ் வாங்கலாம். இது மேல்வாடகை(Sublease) முறையில் வராது என்கிறார். பார்மசிஸ்ட் எப்போதாவது கையெழுத்துப் போட்டுவிட்டு போகிறார். பி.பார்ம் படிக்காமல் மருந்து கடையை வைக்கலாமா? இதற்கு சட்ட அனுமதி உள்ளதா? பார்மசிஸ்ட் எப்போதும் கடையில் இருக்க வேண்டுமா? RTI சட்டப்படி இந்த கடையின் லைசன்ஸ் யார் பெயரில் உள்ளது என எந்தத் துறையினரிடம் கேட்டால் எழுத்து மூலம் பதிலளிப்பார்கள். கடையில் வேலை செய்யும் ஆட்கள் என்ன கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்?
- K.பிரவீன்குமார், காஞ்சிபுரம்
பதில் :
வாடகை ஒப்பந்த ஆவணத்தில் உள்ள ஷரத்துகளின்படி, வாடகை தாரர் நடந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களது வாடகைதாரர் மருந்துக் கடை வைப்பதற்கு மெடிக்கல் கவுன்சிலில், முதலில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பொதுவாக, பார்மசிஸ்ட்டுகள் பெயரில் மருந்துக் கடைகளை திறந்துவிட்டு 9, 10ஆவது படித்த நபர்களை வைத்துக் கொண்டு கடையை நடத்தி வருகின்றனர் என்பது வேதனையான விஷயம்தான். மருந்துக்கடையில் பார்மசிஸ்ட் மூலமாகவே மருந்துகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஒரு பார்மசிஸ்ட்டின் பெயரில் 10, 15 கடைகள் இருக்கின்றன. மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு இப்படிப்பட்ட செயல்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர் என்பதும் வேதனையான விஷயம்தான்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதோடு, பொதுத்தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வேண்டும், பார்மசிஸ்ட், பெயரில், கடையில், லைசென்ஸ், வாடகை, பெற்றிருக்க, மெடிக்கல், மருந்துக், வருகின்றனர், மாவட்ட, விஷயம்தான், வேதனையான, மூலம், நடத்தி, வைக்கலாமா, மருந்துக்கடை, நான், உள்ளது, கடையை, படிக்காமல், அனுமதி