கேள்வி எண் 32 - சட்டக்கேள்விகள் 100
32. உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்துக்களுக்கு சட்டரீதியான வாரிசுகள் யார்?
ஒருவர் எந்த உயிலும் எழுதிவைக்காமல் இறந்துவிட்டார் அவருக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள். அதில் ஒரு மகனை கடந்த ஒன்றரை வருடங்களாக காணவில்லை. இறந்தவரின் சொத்துக்களுக்கு சட்டரீதியான வாரிசுகள் யார், யார்?
- D.தன்ராஜ், கொளத்தூர்
பதில் :
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஆண் எந்த ஒரு உயிலும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அவரது தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே முதல் நிலை சட்ட வாரிசுகள் ஆகிறார்கள். அவருடைய சொத்துக்கள் சரிசமமாக இவர்கள் அனைவரையும் சாரும். ஒரு வேளை மேற்கண்ட முதல் நிலை சட்ட வாரிசுகள் இல்லையெனில் அடுத்ததாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு அவருடைய சொத்துக்கள் சென்றடைய வழி வகை உண்டு.
எனவே உங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை சொத்தை நீங்கள், உங்கள் சகோதரர்கள் மற்றும் உங்கள் அம்மா ஆகியோருக்கு சரிசமமாக பிரிக்கப்பட வேண்டும். முக்கியமாக உங்களில் காணாமல் போன சகோதரருக்கும் ஒருபங்கு நிச்சயமாக ஒதுக்கிட வேண்டும். காணாமல் போனவரை ஏழு ஆண்டுகளுக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாமல் போனால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களில் முதல் நிலை சட்டவாரிசான உங்கள் அம்மா விற்குத்தான் அவருடைய பாகம் செல்லும், ஒரு வேளை உங்கள் அம்மா இந்த காலத்தில் இறந்திட நேர்ந்தால் அவரு டைய பாகம் உங்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் இங்கு நீங்கள் இரண்டாம் நிலை சட்ட வாரிசுகள் ஆவீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், வாரிசுகள், நிலை, சட்ட, அம்மா, அவருடைய, யார், சொத்துக்களுக்கு, நீங்கள், வேண்டும், உங்களில், காணாமல், சட்டரீதியான, பாகம், வேளை, எந்த, மனைவி, இறந்தவரின், சொத்துக்கள், உயிலும், சரிசமமாக, இரண்டாம்