கேள்வி எண் 23 - சட்டக்கேள்விகள் 100
23. வழக்கு நிலுவையில் உள்ளபோது எதிர்கட்சியினர் எங்களை குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள். என்ன செய்வது?
நான் எனது சொத்து சம்பந்தமாக சிவில் நீதிமன்றத்தில் எதிரி மீது வழக்கு தொடுத்துள்ளேன், தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து “நான் கோர்ட்டிலிருந்து வருகிறேன். எதற்காக இந்த வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்? இந்த வழக்கு தொடர் பாக நீங்கள் இந்த தேதியில் ஆஜராக வேண்டும், உங்கள் வழக்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எதற்காக இந்த வீண் அலைச்சல்?” என்று பலவாறு கேள்விகளை கேட்கிறார்கள். மேலும் எங்கள் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துள்ளார்கள். இதுபற்றி எங்கள் வழக்குரைஞரிடம் கூறினேன். ஆனால் அதைப்பற்றி அவர் எந்த பதிலும் சொல்ல மறுக்கிறார். தயவு செய்து ஐயா அவர்கள் இதற்கு விளக்கமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- P. பொன்னம்மாள், கடலூர்
பதில் :
உங்கள் கேள்வி சற்று விசித்திரமாகத்தான் உள்ளது. தவறு எங்கு நடக்கிறது என்பதுதான் கேள்விக்குறி?ஆம்! எந்த நீதிமன்றத்திலிருந்தும் இவ்வாறு ஆட்கள் அனுப்பப்படுவதில்லை. அப்படியே நீதிமன்றத்திலிருந்து ஒருவர் உங்களைத் தேடிவருகிறார் என்றால் அது உங்களுக்கு சம்மன் அளிப்பதற்காக மட்டும்தான் இருக்க முடியுமே தவிர எந்தவித கேள்விகளுக்கும் அதிகாரம் கிடையாது. உங்கள் விஷயத்தில் நடந்திருப்பது எதிரிதரப்பிலிருந்து வரும் மிரட்டலாகவே நான் உணர்கிறேன். உங்கள் வழக்குரைஞரின் மௌனத்திற்கு காரணம் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இப்படிப்பட்ட நபர் வரும்பட்சத்தில் அவருடைய உரிய அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லலாம். மேலும் இவர்களைப்பற்றி அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம், இருந்தும் தீர்வு கிடைக்கவில்லையென்றால் தங்களுடைய அடுத்த வாய்தா தேதியில் உங்கள் வழக்குரைஞர் மூலமாக இந்த நிகழ்வினை எழுத்து வடிவில் தாக்கல் செய்வதன் மூலம் நிச்சயம் நிவாரணம் பெறமுடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, வழக்கு, உங்கள், எங்கள், மேலும், எந்த, நிலுவையில், தேதியில், நான், எதற்காக, உள்ளது