கேள்வி எண் 21 - சட்டக்கேள்விகள் 100
21. கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும், அனுபவிக்கமுடியாமல் தவிக்கும் எனக்கு எங்கு இலவச சட்டஉதவி கிடைக்கும்?
ஐயா, நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும், அதை அனுபவிக்க முடியாமல் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன், எல்லோரும் என்னை ஏமாற்றிவிட்டு என் சொத்துக்களை கைப்பற்றி சுகபோகமாக வாழ்கிறார்கள். நான் பல வக்கீல்களை நேரில் சந்தித்து முறையிட்டேன். எல்லோரும் பதில் அளிக்கவே பணம் எதிர் பார்க்கிறார்கள். எனக்கு எங்கு இலவசமாக ஆலோசனை கிடைக்கும்-?
- ரா.சிந்தனைச் செல்வி, நங்கநல்லூர்
பதில் :
இலவச ஆலோசனைப் பகுதிக்கே இப்படியரு கேள்வியா? -நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு நாம் கேட்கும் கேள்வி களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி சட்ட வல்லுநர்கள் நமக்கு பதிலளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சில வழக்கு களில் குற்றவாளிகளுக்கு அரசே வழக்குரைஞரை நியமித்து வாதாட வழி செய்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, இலவச, எனக்கு, பதில், சட்ட, ஆலோசனை, எல்லோரும், கிடைக்கும், இருந்தும், எங்கு, சொத்துக்கள், நான்