கேள்வி எண் 2 - சட்டக்கேள்விகள் 100
2 . சினிமா ஆசைகாட்டி ஆபாசமாக நடிக்க வைத்து ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
ஐயா, நான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள். எனது கணவர் என் மகளுக்கு 11 வயது இருக்கும்போதே இறந்து விட்டார். சமீபத்தில் நானும் எனது ஒரே மகளும் பிழைப்புக்காக சென்னைக்கு வந்தோம். இங்கு சில காலங்களுக்கு முன்பு ஒருவர் என் மகளை சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன் என்று கூறி ஆசை வார்த்தை காட்டி தற்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறாள். ஆனால் சில இயக்-குநர்கள் குடும்பப்பாங்கான கதாப்பத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி அவளுக்கே தெரியாமல் சில அரைகுறையான உடையுடன் நடிக்கும்படியான காட்சிகளை எடுத்துவிட்டனர். அதை எங்களிடம் போட்டு காட்டியவுடன் மிகவும் அதிர்சியடைந்தோம். ஆனால் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள், “படம் வெளியே வந்தவுடன் பாரு உங்க பொண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கும்“ என்று கட்டாயப்படுத்துகிறார்கள். எங்களுக்கு பயமாக உள்ளது. தயவுசெய்து ஐயா அவர்கள் இந்த நிலையில் நாங்கள் சட்டப்படியாக எடுக்கவேண்டிய நடவடிக்கையை பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- பெயர் வெளியிடவிரும்பாத வாசகி
பதில் :
பொதுவாகவே ஒரு பெண்ணை அநாகரிகமாகச் சித்தரித்தல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம் 1986 (Indecent Representation of women (Prohibition) Act 1986) பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் வகையில் கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் எதையும் சம்பந்தப்பட்ட பெண்ணை சிறுமைப்படுத்தும் நோக்கில் வெளியிடுவோருக்கு, சம்பந்தப்பட்டவர் இந்த குற்றத்தை முதல் தடவை செய்யும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளும், மீண்டும் அதே குற்றத்தை தொடர்ந்து செய்யும் பட்சத்தில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுவார்.
ஆதலால் உங்களுடைய பிரச்னையில் நீங்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தை அணுகி புகார் அளிப்பதன் மூலமே இந்த பிரச்னைக்கு முடிவு வரலாம். அப்படியும் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையெனில் நீங்கள் வழக்குரைஞரின் உதவியுடன் உரிய நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நடிக்க, பெண்ணை, தீர்வு, நீங்கள், பட்சத்தில், குற்றத்தை, எனது, சித்தரித்தல், செய்யும்