கேள்வி எண் 13 - சட்டக்கேள்விகள் 100
13. விவாகரத்து பெற்ற பின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?
ஐயா, எனக்குத் திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகின்றன. தினம், தினம் என் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். மேலும் எனக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நான் சட்டப்படி என் கணவரை விவாகரத்து செய்ய விரும்புகிறேன். ஆனால் விவாகரத்து பெற்றபின் என்னுடைய ஆண் குழந்தை தந்தைக்குத்தான் சொந்தம் என்று கூறுகிறார்கள். அது உண்மையா?
- T. சந்தியா, சென்னீர் குப்பம்
பதில் :
ஆம், உண்மைதான், Hindu Minority and Guardianship Act 1956 பிரிவு (6)ன் படி, ஒரு ஆண் பிள்ளை மற்றும் திருமணமாகாத பெண் ஆகிய இருவருக்கும் அவர்களது உடல், வாழ்க்கை, சொத்துக்கள் அனைத்துக்கும் தந்தைதான் காப்பாளராக இருக்க முடியும். அவருக்குப் பிறகுதான் தாய். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ஐந்து வயதுவரை தாயின் பொறுப்பில் இருப்பது சிறந்தது (இது பொறுப்பு மட்டுமே தவிர -காப்பாளர் என்கிற உரிமை அல்ல).
தந்தை ஒருவேளை மனநிலை சரியில்லாதவராக இருந்தாலும்கூட, தாய்தானாக பொறுப்பேற்கும் காப்பாளராக முடியாது. அவர் தன்னை காப்பாளராக நியமிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்த குழந்தை கள் எனில் தாய் தான் காப்பாளராக முடியும். தாய்க்குப் பிறகுதான் தந்தை.
ஆனால் சமீப காலங்களில் தாய், தந்தை இருவரில் யாரிடம் வளர்ந்தால் குழந்தைக்கு பாதுகாப்பு என்பதை ஆராய்ந்து அவரிடம் குழந்தையை ஒப்படைக்கச் சொல்லி தீர்ப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, காப்பாளராக, குழந்தை, தாய், தந்தை, விவாகரத்து, குழந்தையோ, பிறகுதான், பெண், சொந்தம், தினம், செய்ய, முடியும்