முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு » வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
மக்களின் அன்றாட வாழ்வில் நிம்மதியேற்படுத்தும் விதத்தில் பெண்டிங் பிரபு மேற்கொண்ட பாராட்டத்தக்க நடவடிக்கை தக்கர்கள் என்னும் வழிப்பறி கொள்ளையர்களை ஒடுக்கியதாகும். 50 அல்லது 100 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்ட தக்கர்கள், வணிகர்களாகவோ, யாத்ரிகர்களாகவோ மாறுவேடம் அணிந்து, பயணிகளின் கழுத்தை நெரித்துக்கொன்று வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மத்திய வட இந்தியாவில் நிலவிய குழப்பத்தினால் இத்தகைய கொள்ளையர்களின் எண்ணிக்கை பெருகியது. 1830 ஆம் ஆண்டு தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையை கர்னல் சீலீமேன் என்பவர் தொடங்கினார். ஐந்து ஆண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் பிடிபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தக்கர்களை ஒடுக்கும் பணியினை திறமையுடன் செய்த காரணத்தால் சர் வில்லியம் சீலீமேன் 'தக்கீ சிலீமேன்' என்று அழைக்கப்பட்டார்.
பெண் சிசுக்கொலை
பெண் சிசுக்கொலை என்ற இந்த வன்மையான மனித நேயமற்ற செயலை சில நாகரிகமுள்ளவர்களும் செய்து வந்தனர். ராஜபுதனம், பஞ்சாப், மாளவம், கட்ச் போன்ற பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்த வழக்கம் பரவியிருந்தது. வங்காளத்தில் சவுகர் தீவில் நடைபெற்ற குழந்தை பலி சடங்கை ஒழிப்பதற்கு பெண்டிங் தீவிர நடவடிக்கையெடுத்தார். பெண் சிசுக்கொலையையும் தடை செய்தார். அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் பெண்டிங் பிரபு , வரலாறு, பெண்டிங், வில்லியம், இந்திய, பெண், பிரபு, சீலீமேன், வழக்கம், சிசுக்கொலை, தக்கர்களை, இந்தியா, தக்கர்கள், பேர்