முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு » வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சமூக சீர்திருத்தங்கள்
வில்லியம் பெண்டிங் கொண்டு வந்த சமூக சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் அவரது பெயரை நிலைபெறச் செய்தன. சதிமுறை ஒழிப்பு, தக்கர்களை ஒடுக்குதல், பெண் சிசுக்கொலை தடுப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.
சதி முறை |
கணவரின் சிதையிலேயே விதவையைத் தள்ளி கொன்றுவிடும் பண்டைய 'சதி' என்ற வழக்கம் இந்தியாவில் பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. மனிதாபிமானமற்ற இச்செயல் வட இந்தியாவில் குறிப்பாக வங்காளத்தில் பரவலாக காணப்பட்டது. வங்காளத்தில் ஒரேயாண்டில் அத்தகைய 800 நிகழ்வுகள் நடைபெற்றன என்ற செய்தி கேட்ட பெண்டிங் அதிர்ச்சியடைந்தார். இயற்கை நியதிக்கு மாறான இச்செயலை குற்றம் என்று கருதிய பெண்டிங் அவ்வழக்கத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். 1829 டிசம்பர் 4ஆம் நாள் 'விதிமுறை 17' என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் சட்டப்படி ஒழிக்கப்பட்டது. சதிமுறையைப் பின்பற்றுவோர் சட்டப்படி நீதிமன்றத் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என இச்சட்டம் கூறியது. 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் பெண்டிங் பிரபு , பெண்டிங், வரலாறு, இந்திய, வில்லியம், பிரபு, வங்காளத்தில், இந்தியாவில், இச்சட்டம், வழக்கம், சட்டப்படி, சமூக, பண்டைய, இந்தியா, சீர்திருத்தங்கள், சதிமுறை, ஒழிப்பு