முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு » வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கச்சார், ஜெயிந்தியா
வடகிழக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கச்சார் அரசு முதல் பர்மியப்போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட யாண்டபூ உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பாதுகாப்பில் விடப்பட்டது. இந்த சிறிய நாட்டின் அரசர் 1832ல் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வாரிசுகள் இல்லாமையால் அந்த நாட்டு மக்களின் விருப்பப்படி பெண்டிங் கச்சார் ஆட்சியை இணைத்துக் கொண்டார்.
முதல் பர்மியப் போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட மற்றொரு நாடு ஜெயிந்தியா. இச்சிறிய நாட்டின் ஆட்சியாளர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். காளி தேவதைக்கு பலிகொடுக்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷார் சிலரை இவர் கடத்தினார். இத்தகைய கொடுஞ்செயலை தவிர்க்கும் பொருட்டு தலைமை ஆளுநர் பெண்டிங் இந்நாட்டையும் இணைத்துக்கொண்டார்.
குடகு
குடகை ஆட்சிப்புரிந்த அரசர் வீரராஜா கொடுங்கோலராகத் திகழ்ந்தார். மக்களை காட்டு மிராண்டித்தனமாக நடத்தியதுடன் தனது உறவினர்களில் ஆண்பாலர் அனைவரையும் கொன்றார். வில்லியம் பெண்டிங் கர்னல் லிண்ட்சே என்பவரை குடகு தலைநகரான மெர்க்காராவுக்கு அனுப்பினார். 1834ல் அரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு குடகு இணைத்துக் கொள்ளப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் பெண்டிங் பிரபு , வரலாறு, பெண்டிங், இந்திய, வில்லியம், அரசர், குடகு, கச்சார், பிரபு, இணைத்துக், கொண்டார், இந்தியா, நாட்டின், ஜெயிந்தியா, பிரிட்டிஷ், கப்பன்