வெல்லெஸ்லி பிரபு
வெல்லெஸ்லி பற்றிய மதிப்பீடு
ஆதிக்கக் கொள்கையை பின்பற்றிய வெல்லெஸ்லி நாடுகளை வென்று இணைப்பதிலேயே குறியாக செயல்பட்டார். பேரரசுக்கு அடிகோலிய மாமனிதர்களில் வெல்லெஸ்லியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்பதை பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். இந்தியாவில் பிரிட்டிஷ் தலைமையை ஏற்படுத்தியதே அவரது முக்கியச் சாதனையாகும். இந்திய அரசுகளின் பலவீனத்தை கண்டறிந்து தனது அரசியல் நுட்பத்தை (துணைப்படைத் திட்டம்) அவர் நன்கு பயன்படுத்தினார். கர்நாடகம், தஞ்சாவூர் அரசுகளை இணைத்தமையால் சென்னை மாகாணம் உருவாக அவர் வழிவகுத்தார். சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று இவரை அழைக்கலாம். இத்தகைய வழிகளில், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி வணிகக்குழுவின் பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. "வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக இவர் மாற்றினார்".
அடுத்த தலைமை ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ (1805 - 1807) இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது ஆட்சியின் போதுதான் 1806 ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் நடை பெற்றது.
அடுத்து மின்டோ பிரபு (1807 - 13) தலைமை ஆளுநராக பதவியேற்றார். இவர் 1809 ல் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்குடன் உடன்படிக்கை செய்து கொண்டார். 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் இக்காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெல்லெஸ்லி பிரபு , வெல்லெஸ்லி, இந்திய, வரலாறு, பிரபு, பிரிட்டிஷ், பேரரசு, மாகாணத்தையும், ஆளுநராக, ஆண்டு, சென்னை, தலைமை, இவர், இந்தியாவில், ஆங்கிலேய, இந்தியா, கிழக்கிந்திய, ஹோல்கர், நன்கு, அவர்