வெல்லெஸ்லி பிரபு
திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, மைகுர் வெல்லெஸ்லியின் காலடியில் கிடந்தது. மைசூர் அரசின் மையப் பகுதியில் மீண்டும் இந்து அரசை அவர் ஏற்படுத்தினார். மூன்றாம் கிருஷ்ணராஜா என்ற ஐந்து வயது சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டான். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் தலைநகராகியது. முந்தைய அமைச்சரான பூரணய்யா திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் அரசின் எஞ்சிய பகுதிகளை பிரிட்டிஷாரும் நிசாமும் பங்கிட்டுக் கொண்டனர். கனரா, வையநாடு, கோயம்புத்தூர், தர்மபுரி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகியவற்றை பிரிட்டிஷார் தம்வசமே வைத்துக்கொண்டனர். கூட்டியை சுற்றியிருந்த பகுதிகள், சித்தூரின் ஒரு பகுதி, சித்தலதுர்க்கா மாவட்டங்கள் ஆகியவை நிசாமுக்கு கொடுக்கப்பட்டன. மைசூரில் ஆங்கிலேய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெல்லெஸ்லியும் மராட்டியர்களும்
துனணப்படைத் திட்டத்திற்கு உட்படாத ஓரே பகுதி மராட்டியமாகும், மராட்டியர்களின் தலைவராக நானா பட்னாவிஸ் திறம்பட செயல்பட்டார். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் சிக்காமல் மராட்டிய அரசை சுதந்திரமாக வைத்திருக்க அவர் பாடுபட்டார். திப்புவுக்கு எதிராக காரன் வாலிசுக்கு உதவியதால், மைசூரிலிருந்து பெரும் நிலப்பகுதிகள் அவருக்கு கிடைத்தன. 1800 ஆம் ஆண்டு நானா பட்னாவிஸ் மறைந்தது மராட்டியருக்கு பேரிழப்பாகும்.
![]() |
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் |
பீதியடைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். 1802ல் அலர் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி பேஷ்வா மீண்டும் மராட்டிய அரசின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது பெயரளவுக்கே என்ற போதிலும், பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெல்லெஸ்லி பிரபு , பேஷ்வா, வரலாறு, மைசூர், இந்திய, மீண்டும், வெல்லெஸ்லி, அரசின், மராட்டிய, பாஜிராவ், பிரபு, இரண்டாம், பசீன், பட்னாவிஸ், நானா, பெரும், ஹோல்கர், அவர், பிறகு, ஆங்கிலேய, இந்தியா, வெல்லெஸ்லியின், அரசை, பகுதி, கொண்டனர், நியமிக்கப்பட்டார், தலைவராக