வெல்லெஸ்லி பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை 'வங்கப்புலி' என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி 'இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு' என்பதற்குப்பதில் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் "துணைப்படைத் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது.
வெல்லெஸ்லி பதவியேற்ற போது இந்திய அரசியல் நிலைமை
வெல்லெஸ்லி பிரபு |
காரன்வாலிஸ் பிரபுவுக்குப் பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்த சர் ஜான் ஷோர் ஆட்சிக் காலத்தில் அவர் பின்பற்றிய தலையிடாக் கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே எஞ்சியது. இதனால் ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது, அவரது தலையிடாக் கொள்கை பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும், நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறித்த செய்திகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இத்தகைய பின்னணியில் தான் வெல்லெஸ்லி தமது கொள்கையை வகுத்தார். பிரிட்டிஷ் புகழைத் தக்கவைப்பது, இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் குறித்த அச்சத்தை அகற்றுவது ஆகிய இரண்டுமே அவரது முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெல்லெஸ்லி பிரபு , வெல்லெஸ்லி, இந்திய, வரலாறு, பிரிட்டிஷ், பிரபு, இந்தியாவில், அவர், அச்சத்தை, அரசியல், கொடுத்தது, பிரிட்டிஷாருக்கு, தலையிடாக், குறித்த, அவரது, திட்டம், பின்பற்றிய, ஆங்கிலேய, ஆளுநராக, முக்கிய, இந்தியா, தனது, இந்தியாவின், தலைமை