ஹேஸ்டிங்ஸ் பிரபு
இது மராட்டியரிடைபே மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரையும் வருத்தப்பட வைத்தது. திரிம்பக்ஜியை ஒப்படைக்குமாறு பேஷ்வாவை பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது. பேஷ்வாவும் இதற்கு உடன்பட்டார். பிரிட்டிஷார் திரிம்பக்ஜியை தானா சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், 1817 ஜூன் 3ல் பிரிட்டிஷ் தூதுவர் எல்பின்ஸ்டன் பேஷ்வாவை வற்புறுத்தி பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு செய்தார். மராட்டியர்களின் தலைவராகும் ஆசையை பேஷ்வா துறக்கவேண்டியதாயிற்று.
மூன்றாம் மராட்டியப் போர் (1817 - 1818)
சிறிது நாட்களிலேயே இந்த உடன்படிக்கையை பேஷ்வா ரத்து செய்துவிட்டு 1817 நவம்பர் 5ல் பிரிட்டிஷ் தூதரகத்தின்மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால், கிர்கே என்னுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல், போன்ஸ்லே தலைவர் அப்பாசாகிப் தாம் 1817 மே 17ல் கையெழுத்திட்ட நாக்பூர் உடன்படிக்கையை ஏற்க மறுத்தார். இவ்வுடன்படிக்கைப்படி நாக்பூர் வணிகக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்பாசாகிப் 1817 நவம்பரில் பிரிட்டிஷாருடன் நடைபெற்ற சிதாபல்தி போரில் முறியடிக்கப்பட்டார். பேஷ்வா இச்சமயத்தில் ஹோல்கரின் உதவியை நாடினார். ஆனால், பிரிட்டிஷார் 1817 டிசம்பர் 21ல் பரோடாவில் ஹோல்கரை முறியடித்தனர். இவ்வாறு, 1817 டிசம்பரில் மிகப்பெரும் மராட்டியக் கூட்டிணைவு என்ற கனவு தவிடுபொடியாகியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹேஸ்டிங்ஸ் பிரபு , வரலாறு, இந்திய, ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ், பேஷ்வா, பிரபு, அவர், அப்பாசாகிப், நாக்பூர், பிரிட்டிஷார், உடன்படிக்கையை, திரிம்பக்ஜியை, இந்தியா, வணிகக், குழுவின், கங்காதர், பேஷ்வாவை