ஹேஸ்டிங்ஸ் பிரபு
பல்வேறு அரசியல் சாதனைகள் 1618ல் நடத்தப்பட்டதால், பிரிட்டிஷாருக்கு அந்த ஆண்டு முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க நினைத்த மராட்டியரின் திட்டம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் தலைமைக்கு தடையாக இருந்த மராட்டியர்கள் வீழ்த்தப்பட்டனர்.
மராட்டியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
ஆங்கிலேய - மராட்டியப் போர்களில் மராட்டியர் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறலாம். அவற்றில் முக்கியமானவை:
- திறமையான தலைமை இல்லாதது
- படைவலிமை இல்லாதது
- அவர்களுக்கிடையே நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒற்றுமையின்மை
- தாங்கள் வென்ற பகுதிகளின் ஆதரவைப் பெறத் தவறியது.
- இந்தியாவில் ஆட்சிசெய்த மற்ற அரசர்கள், நவாபுகளுடன் நட்புடன் இல்லை.
- பிரிட்டிஷார் அரசியல் மற்றும் ராஜதந்திரத்தை சரியாக மதிப்பிடத் தவறியது.
சர் தாமஸ் மன்றோ |
ஹேஸ்டிங்சின் பதவிக்காலத்தில் ஆட்சிப் பரப்பின் எல்லை பெருகியது மட்டுமல்லாமல் ஆட்சித் துறையிலும் முன்னேற்றம் காணப்பட்டது. சென்னை மாகாணத்தில் சர் தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்துவாரி முறையை அவர் அங்கீகரித்தார். நீதித்துறையைப் பொறுத்தவரை காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பு சீரமைக்கப்பட்டது, வங்காளத்திலிருந்த காவல் அமைப்பு பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் இந்திய முன்சீப்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. வருவாய் மற்றும் நீதித் துறைக்கு இடையே நிலவிய பகிர்வு கட்டாயமாக பின்பற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் நீதிபதியாகவும் கடமையாற்றினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹேஸ்டிங்ஸ் பிரபு , வரலாறு, இந்திய, ஹேஸ்டிங்ஸ், பிரபு, நிலவிய, தவறியது, இல்லாதது, மன்றோ, ஹேஸ்டிங்சின், காரணங்கள், தாமஸ், பிரிட்டிஷாருக்கு, இந்தியா, இந்தியாவின், ஆங்கிலேய, பிரிட்டிஷ், அரசியல், முக்கியத்துவம்