ஹேஸ்டிங்ஸ் பிரபு
அவர்களது வடமேற்கு எல்லை இமாலயப் பகுதிகளைத் தொட்டது. சிக்கிமிலிருந்து வெளியேறிய கூர்க்காக்கள், காட்மண்டுவில் ஒரு பிரிட்டிஷ் தூதரை வைத்திருக்கவும் ஒப்புக்கொண்டனர். ஆங்கிலேயரைத்தவிர வேறு எந்த அயல்நாட்டவரையும் பணியில் அமர்த்துவதில்லை என்றும் அவர்கள் உறுதியளித்தனர். மலைவாழிடங்களான சிம்லா, முசூரி, நைனிடால், ராணிகட் போன்றவை பிரிட்டிஷார் வசமாகியது. அவற்றை சுற்றுலாத் தலங்களாகவும் நலவாழ்வு ஓய்விடங்களாகவும் பிரிட்டிஷார் மாற்றியமைத்தனர். கூர்க்காப் போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்சுக்கு மார்குயிஸ் பட்டம் வழங்கப்பட்டது.
பிண்டாரிகளை ஒடுக்குதல்
பிண்டாரிகளின் தோற்றம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. மராட்டியப் பகுதியில் படையெடுத்தபோதுதான் பிண்டாரி குறித்த தகவல் கிடைக்கிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பையோ அல்லது சமயத்தையோ சார்ந்தவர்களல்லர். ஊதியம் ஏதுமின்றி அவர்கள் ராணுவத்திலும் பணியாற்றுவதுண்டு. அதற்கு ஈடாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். முதலாம் பாஜிராவ் காலத்தில் மராத்திய ராணுவத்தில் குதிரை வீரர்களாக அவர்கள் பணிபுரிந்தனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஆங்கிலேயருக்கு உதவியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ராஜபுதனப் பகுதிகள் மத்திய மாகாணங்கள் ஆகியன பிண்டாரிகளின் முக்கிய இருப்பிடங்களாகும். கொள்ளையடிப்பதே அவர்களது அடிப்படைத் தொழிலாகும். பிண்டாரிகளின் தலைவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் என்ற இரு இனத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் வாகில் முகமது, சிட்டு, கரிம் கான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இவர்களது தலைமையை ஏற்று செயல்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹேஸ்டிங்ஸ் பிரபு , வரலாறு, இந்திய, ஹேஸ்டிங்ஸ், பிரபு, பிண்டாரிகளின், அவர்களது, பிரிட்டிஷார், பகுதிகள், பகுதியில், இந்தியா, கூர்க்காக்கள், பிரிட்டிஷாருக்கு