ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Extemporize
v. முன்முயற்சியின்றி ஆற்று, துடுமென்று பேசு.
Extend
v. நீட்டு, நீட்டிப்பிடி, ஏந்து, நீடு, நீண்டு நிற்கச் செய், நீட்டிக்கிடத்து, பரப்பு, விரிவுபடுத்து, அகலப்படுத்து, எல்லை விரிவாக்கு, நேராக நிமிர்த்து, மலர்த்து, சென்றெட்டுவி, கால நீட்டிப்புச்செய், தொடர்ந்து இயங்குவி, நீள், நீண்டிரு, நீண்டுகிட, பரந்துகிட, விரிவுறு, அகலப்படு, எல்லைவிரிவாகு, நேராக நிமிர்வுறு, அலர்வுறு, சென்றெட்டு, நீடி, தொடர்ந்து இயல்வுறு, விளைவு பரவலாக்கு, பயன் பரவுவி, வழங்கு, (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று, வரியளவை மதிப்பிடு, படையணியைப் பரவலாக விரிவுபடுத்து.
Extensile
a. நீட்டக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய.
Extension
n. நீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extensive
a. விரிவான, பரந்தகன்ற, பல இடங்களிலும் படர்ந்த, பரவலான, பெரிய, மிகுதியான, தொலைவளாவிய, நெடுங்காலப் பரப்புடைய, விரிவடங்கலான, விரிவகற்சி சார்ந்த, சொற்சுட்டுப்பரப்புச் சார்ந்த, விரிதிற இயலான, வேளாண்மை வகையில் நிலப்பரப்பு மிகுதி மூலமே விளைவு பெருக்கும் இயல்புடைய.
Extensor
n. நீட்டத் தசைப்பற்று, உடற்பகுதியினை நிமிர்த்தும் தசை.
Extent
n. பரவெல்லை, பரப்பு, பரப்பளவு, அளவு, (சட்.) நில மதிப்பீடு, நிலக் கைப்பற்றல், கைப்பற்றலுக்கான கட்டளை.
Extenuate
v. குறைத்துக்காட்டு, தணித்துக்காட்டு, குறைவாக மதிப்பீடு, குறை, தளர்வுறச் செய், மன்னித்துக்குற்றத்தைக் குறைவாக்கு.
Exterior
n. புறம், வௌதப்பக்கம், புறத்தோற்றம், புறத்தோற்ற நடுநிலை இயக்க இயல்பு, (பெ.) புறஞ்சார்ந்த, வௌதப்பக்கமிருக்கிற, வௌதவரவான, அயலான.
Exteriorize
v. புறத்தோற்ற வடிவமாக உள்ளத்தில் படிவப்படுத்திஉணர், புறமெய்ம்மை உளதாகக் குறி.
Exteriors
n. pl. வௌதப்பகுதி.
Exterminate
v. பூண்டோ டழி, அடியோடு களை, தடமில்லாமல் துடைத்தொழி.
External
n. வௌதப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வௌதயிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌதவு தருகிற.
Externalize
v. புறவடிவம் கொடு, பண்புருக்ககற்பி.
Externals
n. pl. புறக்கூறுகள், புறப்பண்புக்கூறுகள், கருமெய்ம்மை சாராத செய்திகள், முக்கியத்துவம் இல்லாத சிறுதிறப் பண்புகள்.
Exterritorial
a. ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட, ஆட்சிக்குப் புறம்பான எல்லை சார்ந்த, தூதுவர் வகையில் பணிநில ஆட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குரிமை பெற்ற.
Exterritoriality
n. வாழ்நிலை ஆட்சி யெல்லைக்குப் புறம்பே இருக்கத்தக்க உரிமை.
Extinct
a. குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த, உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன, நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த, நெருப்பு வகையில் தணலவிந்த, எரிமலை வகையில் எழுச்சியடங்கிய, துஞ்சு நிலையுற்ற, வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன, மாண்ட, உயிர்ப்படங்கிய, நடப்பிலிருந்து மறைந்த.
Extinction
n. தீநொதுப்பு, அணைவு, மரபழிவு, உயிர்ப்படக்கம், எழுச்சி ஓய்வு, வழக்கொழிதவு, தொடர்பறவு, கடன் அறுதி, மாள்வு, மறைவு.
Extinguish
v. அணை, அவி, தணிவி, ஆற்றல் அழி, மேம்பட்ட ஔதயின்முன் மங்கச்செய், மறைவி, எதிரியை வாயடக்கு, அழி, கடன்முழுதும் தீர், ஒழி, துடைத்தழி.