மருதகாசி பாடல்கள் - பக்கம் - 41

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா! அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா (சின்ன) கண்மணியே நீ வளர்ந்து படித்திட வேண்டும் கல்வியிலே கலைமகளாய் விளங்கிட வேண்டும் - செண்பகமே! பலரும் உனைப் புகழ்ந்திட வேண்டும் செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும் (சின்ன) கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே-நீ வெண்ணிலவாய் கொலு விருக்கும் நாள்வர வேண்டும். கண் கவரும் கணவன் கிடைத்திட வேண்டும்-நான் காணும் ஆசைக் கனவெல்லாம் பலித்திட வேண்டும் (சின்ன) |
அழகு நிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. B. ஸ்ரீனிவாஸ்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 41 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேண்டும், சின்ன, ரோஜா