முதன்மை பக்கம் » கேஆர்.சக்தி வேல்
கேஆர்.சக்தி வேல் (KR.Shakthi Vell)
கேஆர்.சக்தி வேல் என்று அழைக்கப்படும் கரு.சக்தி வேல் அவர்கள்
15-11-1972 இல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள தியாகதுருகம் நகரில் திரு கருப்பையா, பாக்கியம் அவர்களுக்கு மகனாகப் பிறந்து அதே ஊரில் வசித்து வருகிறார்.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், பள்ளிப் பருவத்திலிருந்தே தனது தமிழ்ப் பணியைத் தொடங்கிய இவர் தனது நண்பர் இராம.கணேசன் என்பவருடன் இணைந்து "மகாகவி பாரதியார் தமிழ்ச் சங்கம்" என்ற அமைப்பை நிறுவி அதில் செயலராக 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

மகாகவி பாரதியாரின் புகழ் பரப்பும் சேவைக்காக இவருக்கு "அணைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்" சார்பில் பாரதியின் பிறந்த ஊரான எட்டையபுரத்தில் 2005ம் ஆண்டு "பாரதி பணிச் செல்வர்" விருது வழங்கப்பட்டது.
மேலும் ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும், தொல் ஆய்வுகளிலும் ஆர்வம் கொண்ட இவர் தற்போது தமிழகமெங்கிலும் உள்ள புராதண இடங்களுக்குச் சென்று தொன்மையான நமது கலாச்சாரத்தினைப் பற்றிய அறிய பல தகவல்களைச் சேகரித்து வருகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
KR.Shakthi Vell - கேஆர்.சக்தி வேல் - Thiyagadurgam - தியாகதுருகம்