முதன்மை பக்கம் » பனப்பாக்கம் கு.சீத்தா
பனப்பாக்கம் கு.சீத்தா (Panappakkam Ku.Seetha)
பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் 24-10-1937 இல் விழுப்புரம் மாவட்டம் பனபாக்கத்தில் குப்புசாமி வீரம்மாளுக்கு மகனாகப் பிறந்து தியாகதுருகம் நகரில் வசித்து வருகிறார். பள்ளிப் பருவத்தில் தனது கவிதைப் பயணத்தை 1952 இல் தொடங்கியவர். "மதியொளி" என்ற கையெழுத்து இயக்கத்தினை நடத்தியவர். திராவிட நாடு, தென்றல், இலக்கியம், நமது நாடு, நம் நாடு, முரசொலி போன்ற ஏடுகளில் எழுதி வளர்ந்தவர்.
1962 இல் பாவேந்தர் தலைமையில் திருமதி இந்திராணியை மணந்து கொண்டார். பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் சுரதா, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாணிதாசன், கவிஞர் முடியரசன், பெருஞ்சித்திரனார் ஆகிய தமிழ்க் கவிஞர்களின் நட்பைப் பெற்றவர்.

தமிழக அரசின் பாவேந்தர் விருதும், தமிழக முதல்வர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன், கலைஞர் கருணாநிதி ஆகியோர்களிடம் விருது பெற்றவர்.
இவரின் பாட்டு நூலான பனப்பாக்கம் சீத்தாவின் "பாட்டுப் பயணம்" சென்னை, பாரதிதாசன் பல்கலைக் கழகங்களால் ஆய்வு செய்யப் பட்டுள்ளது. சென்னை, திருச்சி, புதுச்சேரி, சீனா ஆகிய வானொலியில் இவரது கவிதைகள், உரைகள், நேர்காணல் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் தற்சமயம் திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Panappakkam Ku.Seetha - பனப்பாக்கம் கு.சீத்தா - Thiyagadurgam - தியாகதுருகம்