சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2956
Word
English & Tamil Meaning (பொருள்)
போக்கு
2
pōkkun. <> போ-.Going, passing, departure;
செல்லுகை. குறும்பி னூழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ, 1, 7, கொளு).
போக்குக்கழி
-
த்தல்
pōkku-k-kaḻi-v. intr. <> போக்கு2+.To dispel the effects of the evil eye. See திருஷ்டிகழி-. Madr.
.
போக்குக்காட்டு
-
தல்
pōkku-k-kāṭṭu-v. intr. <> id.+.1. To point out a way;
வழி காட்டுதல்.
2. To give excuse;
சாக்குச் சொல்லுதல்.
3. To give an outline or clue; to suggest;
குறிப்புக் காட்டுதல். (W.)
போக்குச்சாக்கு
pōkku-c-cākkun. <> id.+.Excuse, pretence;
சாக்கு. (W.)
போக்குச்சுற்றிப்போடு
-
தல்
pōkku-c-cuṟṟi-p-pōṭu-v. intr. <> id.+.See போக்குப்போடு-. (W.)
.
போக்குச்சொல்(லு)
-
தல்
pōkku-c-col-v. intr. <> id.+.To make excuse;
சாக்குக் காட்டுதல்.
போக்குத்தெளிவு
pōkku-t-teḷivun. <> id.+.Apparent abatement of disease just before death;
மரணத்தறுவாயில் உண்டாகும் வியாதித் தெளிவு. Madr.
போக்குநீக்கு
pōkku-nīkkun. <> id.+.1. Going and coming;
போக்குவரத்து.
2. Thoroughfare;
பாட்டை. (W.)
3. Refuge;
புகலிடம். Loc.
4. Escape, opening;
இடைவெளி. (W.)
5. Method, way;
உபாயம். (W.)
6. Habit, practice, method;
பழக்கம். (யாழ். அக.)
போக்குப்போடு
-
தல்
pōkku-p-pōṭu-v. intr. <> id.+.To offer pali in an open or exposed place for dispelling demons or averting evil;
பேய்நீங்க அல்லது திருஷ்டிகழிக்கப் பலியிடுதல்.
போக்குவண்டி
pōkku-vaṇṭin. <> போக்கு3+. Colloq.1. Return bandy, cart returning empty after discharging its load and therefore available for a cheap fare;
காலியாகத் திரும்பிச் செல்வதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி.
2. Carriage or cart going in the desired direction of its own accord and therefore available for a cheap fare;
கருதிய இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி.
போக்குவரத்து
pōkku-varattun. <> id.+.1. Going and returning;
போதலும் வருதலும். புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்து உண்டாயன்று (ஈடு, 6, 10, 10).
2. Familiar intercourse, frequent visiting; intercommunication;
ஊடாடுகை. (W.)
3. Guests;
விருந்தினர். Loc.
4. Income and expenditure;
வரவுசெலவு. (W.)
போக்குவரத்துமணியம்
pōkku-varattu-maṇiyamn. <> போக்குவரத்து+.Clerk deputed to attend on guests;
விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் காரியக்காரன். Loc.
போக்குவரவு
pōkku-varavun. <>போக்கு+.1. See போக்குவரத்து.
.
2. Death and birth ;
இறக்கையும் பிறக்கையும் போக்குவரவு புரிய (சி. போ. 2).
3. Settlement, a revenue term;
நிலவுரிமையை நிச்சயிக்கும் இலாகா. போக்குவரவு கச்சேரி
4. Transfer of patta;
பட்டாமாறுகை, நான் விலைக்குவாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்குவரவு ஆகவில்லை. Nā.
போக்குவாக்கு
Pōkkuvakkun. <>போக்கு2+.1. Good personal appearance
1. பொலிந்த தோற்றம்
2. Good build of body, said of a person;
நல்லாகிருதி.
போக்குவிடு
-
தல்
pōkku-viṭu-v. <> id.+. intr.1. To make a drain, an outlet;
நீர் போகவிடுதல்.
2. See போக்குவை-, 1. (W.)
.
3. To provide a way or means of outlet;
வழிவிடுதல். நாம் ஹ்ருஷ்டராய் அதுக்குப் போக்குவிட்டாட (ஈடு, 2, 6, 3).---tr.
To spend;
செலவழித்தல். Loc.
போக்குவீடு
pōkkuvītun. <> போக்குவிடு-.1. Sending away, causing to go;
செல்லவிடுகை.
2. Outlet, as for one's feelings; giving vent;
சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை. பிராட்டியைக் கண்ட பிரீதிக்குப் போக்குவீடாக (திவ். திருமாலை, 1, வ்யா. பக்.11).
போக்குவை
-
த்தல்
pōkku-vai-v. intr. <> போக்கு+.1. To make underground cellar for hiding treasure;
கீழ்ச்சுரங்கம் அமைத்தல். (W.)
2. To find out ways of expenditure;
செலவுக்கு வழிதேடுதல். Loc.
போக்தவ்வியம்
pōktavviyamn. <> bhōk-tavya.That which is enjoyed;
அனுபவிக்கப்படுவது. போக்தவ்வியங்களா யிருக்கிற சத்தாதிகளினாலும் (சி. சி. 4, 8, சிவாக்.).
போக்தா
pōktān. <> bhōktā. nom. sing. of bhōktr.Enjoyer;
புசிப்பவன். (சி. சி. 2, 2, சிவாக்.)
போக்யதை
pōkyatain. <> bhōgya-tā.Enjoyableness;
அனுபவித்தற்கினியதாந் தன்மை ஸௌகுமார்யத்தையும் போக்யதையையும் உடையவள் (ஈடு, 4, 5, 8).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2956 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், pōkku, intr, போக்குவரத்து, போக்குவரவு, going, போக்கு, excuse, காட்டுதல், outlet, குறைந்த, வாடகைக்குக், கிடைக்கும், வண்டி, expenditure, போக்குவை, போக்குவிடு, fare, சிவாக், guests, method, madr, give, evil, போக்கு2, த்தல், pōṭu, போக்குப்போடு, available, returning, cart, death, cheap