சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2153
Word
English & Tamil Meaning (பொருள்)
நந்து
1
-
தல்
nantu-,5 v. intr. cf. šnath. [K. nandu.]1. To become spoiled; to perish, decay, waste;
கெடுதல். (சூடா.) நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை (திருவாச. 9, 15).
2. To die;
சாதல். திருமைந்த னந்தறீர்ந்தது மாயுளைப்பெற்றதும் (பிரமோத். 21, 61).
3. To be extinguished, put out, as a lamp;
அவிதல். நந்தாவிளக்குச் சுடர் நன்மணி (சீவக. 3144).
4. To set, disappear;
மறைதல். இடையுறு திருவென விந்து நந்தினான் கம்பரா. உண்டாட். 67).
5. To be insulted, abused;
நிந்திக்கப்படுதல். (J.)
நந்து
2
-
தல்
nantu-,5 v. <>nand. intr.1. Increase, grow, wax;
வளர்தல். பெரியவர் கேண்மை பிறைபோல ... நந்தும் (நாலடி, 125).
2. To be luxuriant, fertile;
தழைத்தல். காண நந்திய செந்நிலப் பெருவழி (முல்லைப். 97).
3. To prosper, flourish;
விளங்குதல். நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16).
4. To be proud, glow with pride or splendour;
செருக்குதல். யான் செலினந்திச் செறிற் சாம்புமிவள் (கலித். 78). --tr.
To stir, trim;
தூண்டுதல். விளக்கை நந்து. Loc.
நந்து
nantu-,n. <>நந்து-.1. Increase, prosperity;
ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97).
2. Conch;
சங்கு. (திவா.)
3. Snail;
நத்தை. (பிங்.)
4. Bird;
பறவை. (பிங்.)
நந்துருணி
nanturuṇi,n. perh. நந்து-+ தூறு-.1. Talebearer, backbiter;
புறங்கூறுவோன். (w.)
2. Fool, silly person;
மதியீனன். (w.)
3. Insignificant person;
அற்பன். Loc.
நந்துருணிப்பேச்சு
nanturuṇi-p-pēccu,n. <>நந்துருணி+.1. Backbiting, slander;
குறளை. (w.)
2. Unreliable talk;
நம்பிக்கையற்ற பேச்சு. Loc.
நந்தை
1
nantai,n. perh. நந்து-.1. Parasitic leafless plant.
See கொற்றான். (மலை.)
2. Clearing nut.
See தேற்றா. (w.)
3. Rope for fastening a yoke to the beam of a plough;
கலப்பைநுகந் தொடுக்குங் கயிறு. (W.)
நந்தை
2
nantai,n. <>nandā.1. 1st, 6th, 11th titi;
பிரதமை. சட்டி, ஏகாதசி என்ற திதிகள். (பிங்.) நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 26).
2. Brown cow;
கபிலைப்பசு. காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486).
3. (Jaina.) A tank to the east of Arhat's heaven;
அருகக்கடவுளது சமவசரணத்தின் கிழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந்.1086.)
நந்நான்கு
nannāṉku,adv. <>நான்ழு + நான்கு.By fours, at the rate of four to each;
நான்கு நான்காக.
நப்பாசை
nappācai,n. <>நம்பு-+ ஆசை.1. Insatiable sense of taste;
நாவின்தீராவாசை.
2. Vain hope or desire;
வீணான ஆசை.
நப்பிரி
-
தல்
nappiri-,v. intr. <>நம் + பிரி-.To leave us, separate from us;
நம்மைப்பிரிதல் நப்பிரிந்துறைந்தோர் (ஐங்குறு. 227).
நப்பின்னை
na-p-piṉṉai,n. <>ந + பின்னை.Krṣṇa's favourite wife;
கண்ணனுகந்த தேவியருள் ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19).
நப்பு
nappu,n.A kind of stone;
சிறுகல் வகை. Loc.
நப்புச்சப்பு
nappu-c-cappu,n. <>நைப்பு +. Loc.1. Taste;
உருசி. கறியில் நப்புச்சப்பில்லை.
2. Property, possessions;
சொத்து.
நப்புணர்
-
தல்
na-p-puṇar-,v. intr. <>நம் + புணர்-.To join us, unite with us;
நம்மைச்சேர்தல். தேற்றஞ்செய்து நப்புணர்ந்து (ஐங்குறு. 23)
நப்பூதனார்
na-p-pūtaṉār,n. <>ந2 +.A poet, author of Mullaippāṭṭu;
முல்லைப்பாட்டு இயற்றிய ஆசிரியர்.
நபம்
napam,n. <>nabhas.1. Sky ;
ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8).
2. The Tamil month Avaṇi = August-September;
ஆவணி மாதம். (W.)
3. Rainy season;
கார் காலம். (இலக். அக.)
நபர்
napar,n. <>U. nafar.Individual, person;
ஆள். (C. G.)
நபர்கதி
napar-kati,adv. <>U. nafar + U. gatti.Individually;
ஒவ்வொருவருக்கு.
நபர்கதிபைசல்
napar-kati-paical,n. <>id.+ id.+.Individual settlement;
ஒவ்வொருவருக்கும் தனித்தனி செய்யும் முடிவு. (C. G.)
நபர்ஜாமீன்
napar-jāmīṉ,n. <>id.+.Personal security;
ஆட்பிணை. (C. G.)
நபனம்
napaṉam,n. <>snapana1. Bathing;
நீராட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந் இட்ட. அபிஷே. 9).
2. Ceremony of purifying articles used in bathing an idol;
அபிஷேகப்பொருளைச் சுத்தி செய்யுஞ் சடங்கு. சம்புரோக்கண நபனம் (திருவானைக் .கோச்செங். 40).
நபனமண்டபம்
napaṉa-maṇṭapam,n. <>id.+.That portion of a temple in front of the inner sanctuary, where the napaṉam ceremony is performed;
சர்ப்ப கிருகத்துக்கு முன்னேயுள்ள திருமஞ்சன மண்டபம். (Insc.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2153 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நந்து, napar, intr, நந்தை, பிங், nantu, person, individual, nappu, nafar, napaṉam, ceremony, bathing, நப்பின்னை, நபனம், kati, nantai, நந்துருணி, increase, சூடா, nanturuṇi, perh, taste, நான்கு, tamil, ஐங்குறு