சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1603
Word
English & Tamil Meaning (பொருள்)
செய்யுளியல்
ceyyuḷ-iyal,n. <>id. +.A section in grammatical works, dealing with prosody ;
இலக்கணநூல்களில் யாப்பிலக்கணங் கூறும் பகுதி .
செய்யுளுறுப்பு
ceyyuḷ-uṟuppu,n. <>id. +.Constituent elements of a stanza, viz., eḻuttu, acai, cīr, taḷai, aṭi, toṭai ;
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற செய்யுளின் அங்கங்கள்.
செய்யோள்
ceyyōḷ,n. <>செம்-மை.1. Ruddy or fair-complexioned woman;
செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6).
2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் (பரிபா. 2, 31).
.
செய்யோன்
ceyyōṉ,n. <>id.1. Ruddy, fair-complexioned person ;
செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817).
2. Mars ;
செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ (விதான. கர்ப்பா. 10).
3. Arhat ;
அருகன். (சூடா.)
செய்வகை
cey-vakai,n. <>செய்- +.Method ;
செய்யுமுறை .
செய்வது
ceyvatu,n. <>id.1. That which ought to be done ;
செய்யத்தக்கது. செய்வது தெரிந்திசிற் றோழி (அகநா. 281).
2. (Gram.) Agent, doer of an action ;
கருத்தா. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112).
செய்வினை
cey-viṉai,n. <>id. +.1. Work, undertaking;
செய்யுந் தொழில். செய்வினை தூய்மை (குறள், 455).
2. Karma;
முற்பிறப்பிற் செய்த கருமம். சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1).
3. (Gram.) Verb in active voice;
வினைமுதல்வினை. (இலக். கொத். 67.)
4. Witchcraft, sorcery;
பில்லிசூனியம். Colloq.
செய்வினைமடி
-
தல்
cey-viṉai-maṭi-,v. intr. <>id. +.To shirk or delay one's appointed work, to fail in one's duty ;
உரியதொழிலிற் சோம்புதல். செய்வினை மடிந்தோற் சேர்ந்துறை விலளே. . . மலர்மகள் (பெருங். இலாவாண. 17, 39) .
செய
ceya,<> jaya. int.An exclamation of victory ; --n. The 28th year of the Jupiter cycle;
வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3). ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம்.
செயகோஷம்
ceya-kōṣam,n. <>id. +.Shouts of victory ;
வெற்றியார்ப்பு .
செயசூறை
ceya-cūṟai,n. <>id. +.1. Plunder following victory in a battle ;
வென்ற பின் அடிக்குங் கொள்ளை. (சங். அக.)
2. Spoils of victory ;
வென்று கொள்ளைகொண்ட பொருள். Loc.
செயசேதி
ceya-cēti,n. prob. kṣaya + chēdin.Salt;
உப்பு. (மூ. அ.)
செயடால்
ceyaṭāl,n. <>U. chauṭāl.Foppery ;
See சவடால். சிங்கார வெள்ளைச் செயடாலும் (விறலிவிடு. 29) .
செயதிவசம்
ceya-tivacam,n. <>jaya +.360th day from one's birthday, considered auspicious ;
பிறந்த தினத்திலிருந்து 360 -ஆம் நாளாகிய சுபதினம். (விதான. குணாகுண. 79, உரை) .
செயந்தன்
ceyantaṉ,n.See சயந்தன். செயந்தன் மாபெருந் துணைவன். (பாரத. ஏழாம்போர். 5)
.
செயந்தி
ceyanti,n. <>jayantī.Birthday of gods and great personages ; See ஜயந்தி .
.
செயந்திபுரம்
ceyanti-puram,n. <>Jayantipura.Tiru-c-centūr;
திருச்செந்தூர். (திருச்செந். பு. செயந்திபு. 3) .
செயநீர்
ceya-nīr,n. prob. செய்- +.A medicinal preparation of lime and sal-ammoniac ;
சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த. 1488) .
செயநீர்க்கருத்தன்
ceya-nīr-k-karuttaṉ,n. <>செயநீர் +.Sal-ammoniac ;
நவச்சாரம். (மூ. அ.)
செயப்படுபொருள்
ceya-p-paṭu-poruḷ,n. <>செய்- +.1. (Gram.) Object of a verb;
வினை முதலது தொழிலின்பயனை அடைவது. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112).
2. Subject of a treatise required to be mentioned by its author at the commencement;
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள். தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் (யாப். வி. கடவுள்வா. உரை).
செயப்படுபொருள்குன்றாதவினை
ceya-p-paṭu-poruḷ-kuṉṟāta-viṉai,n. <>செயப்படுபொருள் +. (Gram.)Transitive verb ;
செயப்படுபொருளைப் பெறவல்ல வினைச்சொல். (நன். 320, சடகோப.)
செயப்படுபொருள்குன்றியவினை
ceya-p-paṭu-poruḷ-kuṉṟiya-viṉai,n. <>id. +. (Gram.)Intransitive verb ;
செய்யப்படுபொருளைப் பெறமாட்டாத வினைச்சொல். (நன். 320, சடகோப.)
செயப்பாட்டுவினை
ceya-p-pāṭṭu-viṉai,n. <>செய்- + படு- +.1. (Gram.) Verb in the passive voice ;
படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடைய தாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை. (இலக். கொத். 67.)
2. Karma ;
பழவினை. செயப்பாட்டுவினையொற் றெரிந்துணர் வரியது (மணி. 23, 77).
செயப்பூர்ப்பச்சை
ceyappūr-p-paccai,n. <>Jaya-pura +.True emerald, as brought from jeypore, opp. to vaḷaiyaṟ-paccai ;
[செயபுரியினின்றும் வருவது] உயர்ந்த மரகதமணி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1603 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ceya, gram, viṉai, victory, செய்வது, செய், சொல், செய்வினை, jaya, poruḷ, செய்யோள், paṭu, செயநீர், birthday, ceyanti, செயந்தன், prob, செயப்படுபொருள், சடகோப, paccai, வினைச்சொல், வினை, ammoniac, nīr, voice, செய்யோன், விதான, complexioned, fair, ceyyuḷ, ruddy, வினையே, செயப்படுபொருளே, பொருள், இலக், karma, work, தொல், கொத்