விலங்கியல் :: விலங்குகளின் தொழில் நுட்பவியல்
11. நோயா என்பது யாது?
நோயா என்பது முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆண் கன்றுக்குட்டி ஒரு பசுவின் கருப்பையில் படியாக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது. (2002)
12. தைவான் செய்த படியாக்க ஆய்வுகள் யாவை?
தைவான் மூன்று பன்றிக்குட்டிகளைப் படியாக்கம் செய்துள்ளது. இவை மனிதக் கண்ணறைகளிலிருந்தும் பன்றிக் கண்ணறைகளிலிருந்தும் மரபுப்பொருட்களை கொண்டுள்ளவை. (2002)
13. இவ்வாய்வுகளின் சிறப்பென்ன?
குருதி உறையாமை நோய்க்கு இதன் மூலம் குணமாக்கும் மருத்துவமுறை கண்டறிய இயலும்.
14. முதல் மனித படியாக்கம் எப்பொழுது செய்யப்பட்டது? செய்தது யார்?
2001 அக்டோபர் 10 இல் செய்யப்பட்டது. செய்தது ஜோஸ் சிபெலி. இவர் அர்ஜண்டினாவில் பிறந்த அறிவியலார்.
15. மனிதப் படியாக்க ஆய்வைத் தொடங்க இருப்பவர் யார்?
இத்தாலிய இன வள மருத்துவர் டாக்டர் செவினோ ஆண்டினோரி இதைத் தொடங்கியுள்ளார். இதற்கு ஆங்கில தம்பதியர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்த ஆய்வில் 200 இனவளமற்ற தம்பதியர்களை இவர் பயன்படுத்துவார். (2001)
16. மனிதப்படியாக்கம் செம்மறியாட்டுப் படியாக்கம் இவ்விரண்டில் எது செய்வதற்கு எளிது?
மனிதப்படியாக்கம்.
17. மனிதப்படியாக்கம் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குமா?
முழு மருத்துவப் பயனோடு நின்றால் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குவதற்கில்லை.
18. மரபணுபாக்கம் அல்லது மரபாக்கம் என்றால் என்ன?
இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. இது ஒரு தொழில் நுணுக்கமும் ஆகும்.
19. இந்நுட்பத்தில் அடங்கும் செயல்கள் யாவை?
தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இதில் நடைபெறும் செயல்கள். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும் வரை அவை வளர்ப்புக் கரைசலிலேயே இருக்கும்.
20. மரபணுவாக்கத்தின் பெரும் பயன் என்ன?
புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்பு பொருள்களை உண்டாக்கவும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விலங்குகளின் தொழில் நுட்பவியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - படியாக்கம், மனிதப்படியாக்கம்