விலங்கியல் :: விலங்குகளின் தொழில் நுட்பவியல்
1. படியாக்கம் என்றால் என்ன?
ஒர் உயிரின் நகலை டிஎன்ஏ வழி கருப்பையிள் வளர்த்து உண்டாக்கல். எ-டு டோலி செம்மறியாடு.
2. சார்லஸ் வெயிஸ்மன் செய்த அரும் பணி யாது?
குச்சி வடிவ உயிரியல் மனித இண்டர் பெரானை வெற்றி தரும் வகையில் 1980 இல் உருவாக்கிக் காட்டினார்.
3. ஸ்டீன் வில்லாட்சன் செய்த அருந்செயல் யாது?
1984 இல் வெற்றிதரும் வகையில் செம்மறியாட்டைப் படியாக்கம் செய்தார்.
4. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட விலங்கு யாது?
டோலி என்னும் செம்மறியாடு. 1997 இல் படியாக்கம் செய்யப்பட்டது.
5. இதைச் செய்தவர் யார்?
பேரா. அயன் வில்மட், எடின் பர்க்கிற்கு அருகிலுள்ள ரோக்லின் நிறுவனத்தைச் சார்ந்தவர்.
6. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட வீட்டுப் பூனைக் குட்டி எது?
ஆமை ஒட்டுப்பூனைக்குட்டி ஆகும். இது 2002 ஜனவரி யில் உருவாக்கப்பட்டது.
7. இதுவரை படியாக்கம் செய்யப்பட்டுள்ள விலங்கினங்கள் யாவை?
செம்மறியாடு, பன்றி, சுண்டெலி, பசு.
8. மாற்ற மரபணு பெற்ற விலங்குகள் யாவை?
டோலி, நோயா, பூனைக்குட்டி.
9. படியாக்கம் செய்யப்பட்ட உலகின் முதல் கன்றுக்குட்டி எது? இதைச் செய்தவர்கள் யார்?
ஜெபர்சன் என்னும் ஆண் கன்றுக்குட்டி இதன் எடை 44.1 கிகி. 1998 பிப்ரவரி 16 ஆம் நாள் பிறந்தது. இதைச் செய்தவர்கள் அமெரிக்க அறிவியலார்.
10. படியாக்க முறையில் உருவாக்கப்பட்ட வேறு பாலூட்டிகள் யாவை?
அமெரிக்காவில் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இரு குரங்குகளை 1997 இல் உருவாக்கியது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விலங்குகளின் தொழில் நுட்பவியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - படியாக்கம், யாவை, செய்யப்பட்ட, செம்மறியாடு, டோலி, யாது