பனீர் கோவா உருண்டை

தேவையானவை: பனீர் - 200 கிராம், பால்கோவா - 100 கிராம், பொடித்த சர்க்கரை - அரை கப், தேங்காய்துருவல் - கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன் அல்லது வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்.
செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக்கொள்ளுங்கள். பனீரைத்துருவிக்கொள்ளுங்கள். தேங்காய், கோவா, பனீர், சர்க்கரை, எசன்ஸ் அல்லது ஏலக்காய்தூள் கலந்து, சிறு சிறுஉருண்டைகளாக நன்கு அழுத்திப் பிடித்து வையுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான ஸ்வீட்உருண்டை.குறிப்புகள்: எந்த உருண்டைக்குமே உப்பு வெல்லம் கூடாது. பாகு வெல்லம் எனக் கேட்டு வாங்கவேண்டும்.உருண்டைக்கு வறுக்கும் எந்தப் பொருளையுமே, வாசனை வரும்வரை நன்கு வறுக்கவேண்டும். அப்போதுதான்சாப்பிடும்போது பச்சை வாசனை அடிக்காமல் நன்றாக இருக்கும். புட்டரிசி, எள் ஆகியவற்றை கட்டாயமாக,களைந்து, கல் அரித்துத்தான் பயன்படுத்தவேண்டும். முந்திரி, பாதாம் சிக்கிகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப்பொடித்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை பாயசம், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மேலே தூவிப்பரிமாறினால், சுவை சூப்பராக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனீர் கோவா உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை