ஓமப்பொடி உருண்டை

தேவையானவை: சற்று கனமில்லாத, காரம் சேர்க்காத ஓமப்பொடி - 1 கப், பொட்டுக்கடலை - கால் கப்,தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) - 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்,சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நெய்யில் தேங்காயை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். ஓமப்பொடி, தேங்காய்,பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்சேர்த்து உருண்டைக்கான பதத்தில் பாகுவைத்து, ஓமப்பொடி கலவையை பாகில் கொட்டி, சர்க்கரையையும்தூவி, கிளறி உருண்டை பிடியுங்கள். (செட்டிநாட்டு அயிட்டமான மனோகரத்திலும் இதுபோன்ற உருண்டைசெய்யலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓமப்பொடி உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, டேபிள்ஸ்பூன், ஓமப்பொடி, Recipies, சமையல் செய்முறை