முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
கேள்வி : விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
பதில் :
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது, கேள்விகள் தொகுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. சிறு பிழை/தவறான அர்த்தம் கொள்ளக் கூடிய கேள்வி அல்லது தெளிவற்ற கேள்விகள், தகவல் உரிமை அலுவலருக்கு, தங்களது விண்ணப்பதை தள்ளுபடி செய்ய ஏதுவான காரணங்களாக அமையலாம்.
விண்ணப்பம் எழுத சில வழிகாட்டுதல்கள்
* விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். எழுதும் நோட்டு பேப்பரிலேயே, விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை.கேள்வி: விண்ணப்பம் யாருக்கு அனுப்பப்பட வேண்டும் ?
* விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதிக் கொடுக்கலாம்.
* விண்ணப்பம் தெளிவான எழுத்துக்களில், படித்து புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்.
* தகவல் வேண்டுவன எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம்.
* ஒரு விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படலாம். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும், மற்றும் தொடர்புடைய கேள்விகளாகவும் இருத்தல் நல்லது.
* வேண்டிய தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நெடிய தகவல்கள் வேண்டி ஒரே விண்ணப்பத்தில் கேட்பதை தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் தேவையில்லை. ஏனெனில் தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
* நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில் அனுமதிக்கப்படவில்லை? என்று எழுதுவது.
* தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)-ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கேட்கலாம்.
* கேள்விகள் அதிக பக்கங்கள் இருப்பின் ஒலித்தட்டு(CD) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* தங்களுக்கு எதற்காக தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை தெரிவிக்க அவசியமில்லை.
* கட்டணம் செலுத்திய காசோலை, கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை, விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.
பதில்:
* எந்த பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டதா?
* ஒரு வேளை அருகில் உள்ள பொது தகவல் அலுவலரின் தகவல்கள் அறிய முடியவில்லை எனில், பொது தகவல் அலுவலர், C/o தலைமை அலுவலர் என்று எழுதி, மாவட்ட உயர் அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
* அந்த துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
* தகவல் உரிமை அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் சமர்ப்பித்தல் நலம், ஏனெனில் அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.
* மாநில, மத்திய, நீதிமன்றங்கள் போன்றவை தனிதனியே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்க விதிமுறைகளை வகுத்துள்ளனர்
* கட்டணம் மற்றும் அதை செலுத்தும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டவை. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை அறிந்து, அதை பின்பற்றுதல் அவசியம். உரிய கட்டணத்தை, டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை (சில மாநிலங்களில்), கோர்ட் ஸ்டாம்புகள் (சில மாநிலங்களில்), வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துதல் போன்றவை சில வழிமுறைகளாகும்.
* மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, "Accounts officer" என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், விண்ணப்பம், உரிமைச், பெறும், உரிமை, கேள்விகள், அலுவலருக்கு, கேள்வி, அறியும், பெறுவது, எப்படி, ஆர்டிஐ, அலுவலர், விண்ணப்பிக்கலாம், கீழ், விண்ணப்பத்தில், இந்தியச், அஞ்சலக, சட்டப்படி, தபால், தகவல்கள், மத்திய, பொது, தலைமை, கோட்புகாசோலை, உரிய, அலுவலரின், மாநிலத்திற்கு, டிமாண்ட், டிராப்ட், மாநிலங்களில், | , விதிமுறைகளை, போன்றவை, முறை, கட்டணம், மாநிலம், சட்டத்தின், வேண்டிய, indian, penal, code, எழுதுவது, inidan, தண்டனைச், right, information, இந்திய, பதில், சிறு, கேட்கலாம், ஏனெனில், இருப்பின், எத்தனை, வேண்டும், தேவையில்லை, இருக்க, அவசியமில்லை, உள்ள