கேள்வி எண் 93 - சட்டக்கேள்விகள் 100
93. ஒருவர் என்மீது அளித்துள்ள புகார் விசாரணைக்கு நான் காவல்நிலையம் அவசியம் செல்ல வேண்டுமா?
ஐயா நான் சென்னையில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சாதாரன சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். சமீபத்தில் என் மீது போலியாக ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து காவல் ஆய்வாளர் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தார். உடனே நான் என் தோழி ஒருவரின் உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்றேன். விசாரனை செய்த காவல் ஆய்வாளர், எங்கள் இருவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார். 15 நாட்கள் கழித்து, “அதே நபர் மீண்டும் உங்கள் மீது புகார் அளித்துள்ளார், உடனடியாக ஸ்டேஷனுக்கு வரவேண்டும்“ என்று மிரட்டுகிறார். எனக்கு வேலை முடிவதற்கு 7 மணியாகிவிடும் சார் நான் எப்படி வருவது என்று கேட்டேன். அதற்கு, ‘10 மணி ஆனாலும் பர வாயில்லை நீ வரவேண்டும் இல்லையென்றால் உன்னை ஜெயிலில் அடைத்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். இதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று தயவு செய்து தெரிவிக்கவும்.
- M.சுபலக்ஷ்மி, சென்னை
பதில் :
நீங்கள் உங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரினைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் குற்றவழக்காக இருப்பின் விசாரணைக்கு காவல்துறையினருக்கு நாம் ஒத்துழைப்பதுதான் சாலச் சிறந்தது. எனினும், நீங்கள் பெண்ணாக இருப்பதனால் உங்களிடம் விசாரனை செய்ய காவல்துறையினருக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது பெண்கள், மற்றும் இளம்சிறார்களை (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) விசாரணைசெய்ய நேரிடும்போது காவல்துறையினர் அவரவர் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்யவேண்டுமே தவிர அவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது. ஒருவேளை அவர்களை கட்டாயமாக காவல்நிலையத்தில் வைத்துத்தான் விசாரணை செய்ய வேண்டும் என்றிருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உரிய அழைப்பாணையை (summon) காவல் துறையினர் நேரில் அளித்து, நீங்கள் அதைப் பெற்ற பின்னர் தான் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் சட்ட விதி. ஆகையால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நீங்கள் அந்தப் பகுதியின் ஆளுமைக்குட்பட்ட காவல் துறை உயர் அதிகாரிக்கு (Deputy Commissioner of police புகார் அளிப்பதன் மூலம் அந்த காவல் அதிகாரியின் தொல்லை யிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, காவல், நீங்கள், நான், மீது, புகார், செய்ய, காவல்துறையினருக்கு, நேரில், விசாரணை, வேண்டும், அவர்களை, மிரட்டுகிறார், நிலையத்திற்கு, வேலை, செல்ல, விசாரணைக்கு, ஆய்வாளர், ஸ்டேஷனுக்கு, விசாரனை, ஒருவர், உங்கள்