கேள்வி எண் 27 - சட்டக்கேள்விகள் 100
27. குளியலறை காட்சியை வைத்துக்கொண்டு மிரட்டு பவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அதை இணையதளத்தில் வெளியிடாமல் தடுக்க என்ன செய்வது?
சார், நான் சென்னையில் வசிக்கிறேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் என் மனைவியுடன் காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நாங்கள் சென்னைக்கு திரும்பிய 2 நாட்கள் கழித்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் ஓட்டலில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததாகவும் எங்களுடைய அந்தரங்கக் காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும், குளியலறைக் காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்
நான் அதை நம்பவில்லை. ஆனால், அடுத்து இரண்டு நாள் கழித்து ஒரு கடிதம் எங்கள் முகவரிக்கு வந்தது. அதில் சி.டி.யும் சேர்த்து அனுப்பப்பட்டிருந்தது. அந்த சி.டி.யில் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் நடந்த அனைத்து காட்சி களும் படமாக்கப்பட்டிருந்தன. என்னால் பேசவே முடியவில்லை. மேலும் இந்த சி.டி காட்சிகளின் உண்மை நகல் வேண்டுமானால் ஒரு கணிசமான தொகை கொடுக்கும்படியும் கேட்டுள்ளனர். தவறினால் வீடியோ பதிவினை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். காவல்துறையை தொடர்பு கொள்ளலாமென்றால் விஷயம் பப்ளிக்காகி விடும் என்று பயமாக உள்ளது. என் மனைவியும் இதனால் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். மேலும் அவர்களுக்கு பணம் கொடுத்துவிடலாம் என்றாலும் அவர்கள் அதை அழித்து விடுவார்கள் என்பது என்ன நிச்சயம்? அதனால் நான் காவல்துறைக்கு தெரிவிக்காமல் சட்டப் படி இவர்கள் மீது எவ்வாறு வழக்கு தொடுக்க முடியும்? வீடியோ பதிவினை இன்டர்நெட்டில் வெளியிடாமல் தடுக்க என்ன வழி என்று தயவு செய்து தெளிவு படுத்தவும்.
- பெயர் சொல்ல விரும்பாதவர்.
பதில் :
உங்கள் மனக்கவலை எனக்கு புரிகிறது.ஆனால் என்னைப் பொறுத்தவரை நீங்கள் காவல்துறையின் உதவியை நாடுவதைத் தவிர வேறு எந்த செயல்பாடும் உங்களுக்கு நன்மை அளிக்கும் என்று கூறமுடியாது. இம்மாதிரி தொல்லைகளுக்காகவே தற்போது காவல்துறையில் சிறப்பான ஆய்வாளர் குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் மிக கண்ணியமாக நடந்துக்கொள்ளக் கூடியவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் குடும்ப நலனுக்கு எதிராக செயல் படமாட்டார்கள். மேலும், பத்திரிகைகளுக்கும், உங்கள் கன்னியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செய்திகள் தரமாட்டார்கள். மேலும், பத்திரிகையாளர்களும் இம்மாதிரி செய்திகளை மிக கண்ணியத்துடனே வெளியிடுகின்றனர்.
மேலும் உங்களுக்கு வழக்குரைஞர் தேவைப்பட்டால் உங்கள் அருகிலுள்ள வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்கள் லாயர்ஸ் லைன் குழுவினரையும் நேரடியாக சந்தித்து இது பற்றி நீங்கள் விளக்கம் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மேலும், உங்கள், நான், என்ன, வீடியோ, பதிவினை, இன்டர்நெட்டில், நீங்கள், இம்மாதிரி, உங்களுக்கு, எங்கள், தொடர்பு, பதிவு, நாங்கள், விடுதியில், தடுக்க, வெளியிடாமல், கழித்து, வந்தது, மீது, காட்சிகளை, அதில், செய்துள்ளதாகவும்