முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 209 - சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 209 - சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
தேறவே சந்திரதிசை வியாழபுத்தி |
இப்படிப்பட்ட பெருமைக்குரிய சந்திர திசையில் வியாழபுத்தியின் பொசிப்புக் காலம் 16 மாதங்களாகும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் பலன்களை நன்கு அறிந்து கேட்பாயாக! நல்ல மணமகளுடன் சுபசோபனம் உண்டாகும். அதனால் பெருத்த லாபமும் உண்டாகும். சென்னல் முதலிய விளைவயலில் விளைவாகும். மிகுந்த செல்வம் சேரும். எத்தகைய வியாதியாய் இருந்தபோதும் நிவர்த்தியாகும். எதற்கும் தலைமை தாங்கும் பண்பு ஏற்படுவதோடு பூர்வ ஜென்ம வினையும் அகலும் என்பதை நீ நன்கு உணர்வாயாக என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 207 | 208 | 209 | 210 | 211 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 209 - சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -