புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 112
தானென்ற இரவிக்கு முன்னேபுந்தி |
தன்னிகரில்லாத ரவிக்கு புதன் முன்னே தனித்திருக்க அவன் புனிதனேயாவான். ஆனால் தரித்திர யோகம் கொண்டவனே. ஆனால் ரவிக்குப் பின்னால் புதன் நிற்பின் அச்சாதகன் பெயர் பூமியில் விளக்கமுறக் காணும். அவன் தனவானேயாவான். அதேபோல் ரவிக்குப் பின்னே செவ்வாய் நிற்க அச்சாதகனுக்குப் புத்திரர்கள் மெத்தவும் உண்டு. மற்றும், குருவோடு நீலனும் அவ்வாறு மேவ அச்சாதகன் செவிடனாகவும் முடவனாகவும் இருப்பான் என்று போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 110 | 111 | 112 | 113 | 114 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 112 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -