மருதகாசி பாடல்கள் - பக்கம் - 97

கனகா : கண்களால் காதல் காவியம்-செய்து காட்டிடும் உயிர் ஓவியம்-தங்கள் அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த மானதே எந்தன் பாக்கியம்! சாரங் : கண்களால் காதல் காவியம்-செய்து காட்டிடும் உயிர் ஓவியம்-உந்தன் அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த மானதே எந்தன் பாக்கியம்! கனகா : தங்களால் இந்த இன்பமே-என்றும் சாஸ்வத மாகிட வேண்டுமே! சாரங் : தங்கமே அதில் ஐயமேன்? இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே! கனகா : திங்களைக் கண்ட அல்லி போல்-திரு வாய் மொழியால் உள்ளம் மலருதே! சாரங் : செந்தமிழ் கலைச் செல்வியே-மனம் தேனுண்ணும் வண்டாய் மகிழுதே! (கண்களால்) கனகா : மண்ணிலே உள்ள யாவுமே-எழில் மன்னவர் உம்மைப் போல் காணுதே சாரங் : எண்ணமே ஒன்று ஆனதால்-இணை இல்லாத ஆனந்தம் தோணுதே! கனகா : இன்பமோ அன்றி துன்பமோ-எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்! சாரங் : அன்றில் போல் பிரியாமலே-நாம் இன்று போலென்றுமே வாழுவோம்! (கண்களால்) |
சாரங்கதரா-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 97 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கனகா, சாரங், கண்களால், போல்