மருதகாசி பாடல்கள் - பக்கம் - 96

ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும் மயங்கித் தவிக்கும் எனதுயிரும் அள்ளிச் செறுகிக் கூந்தலிலே அழகாய் முடித்த பெண் மயிலே! துள்ளி யோடும் காவிரி நீ!-உனைச் சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்! பெண் : கள்ள்ம் இல்லா மனத்தாலே கவிதை பாடும் திறத்தாலே உள்ளம் உருகச் செய்தவரே! உணர்வில் ஒன்றிக் கலந்தவரே! ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ! சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்! ஆண் : செந்தமிழ் நாட்டின் சீருயர வந்திடும் காவிரி நதி போலே அந்தகன் எனது வாழ்வுயர அன்பின் வெள்ளம் தந்தவளே! பெண் : சிந்தனைக் கதவும் திறந்திடவே செய்திடும் அறிவுச் சுடர் போலே மங்கை எனது மதி மயக்கம் மாறிடும் விந்தை புரிந்தவரே! ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ! பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடல் நீ! ஆண் : மங்கிய நீல இரவினிலே மலர்ந்தே ஒளி தரும் முழு நிலவே! பெண் : வான நிலவும் ஒளி பெறவே தானம் அளிக்கும் செங்கதிரே!! ஆண் : துள்ளி யோடும் காவிரியே! பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடலே! |
பிறந்த நாள்-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 96 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், சொந்தம், கொள்ளும், காவிரி, யோடும், துள்ளி, அலைகடல்