மருதகாசி பாடல்கள் - பக்கம் - 69

பெண் : படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா! பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா! ஆண் : பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா! படிப்ப தெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா? (படிக்க) பெண் : கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு-நாம் எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு? ஆண் : ஒட்டும் இரு உள்ளந் தன்னில் பற்றிக்கொண்டது-அந்த புத்தம்புது நெருப்பைத் தானே காதலென்பது! கவிஞர் சொன்னது! (படிக்க) பெண் : தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே செங்கதிரோனைச் சுற்றும் சேதி பழைய பாடமே! ஆண் : என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இந்த உலகமே-இன்று உன்னைச் சுற்றிக்கேட்கும் பாடம் புதிய பாடமே-புதிய பாடமே! (படிக்க) ஆண் : படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா! பெண் : பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா! இரு: ஹா... ஹா... ஹா... இம்... ம்... ம்... |
தாயில்லாப் பிள்ளை-1961
இசை : к v. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 69 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பாடம், பெண், படிக்க, பாடமே, நெருப்பு, வாத்தியாரய்யா, பழைய