மருதகாசி பாடல்கள் - பக்கம் - 42
தாயாக்கி வச்ச என் தங்கமே! நீ போகுமிடம் செல்வம் பொங்குமே!-என்னை (தாயாக்கி) வாயும் வயிறுமாய் இருக்காமே!-ஒரு மருத்துவச்சி வந்து பார்க்காமே! மாவடுவை வாங்கிக் கடிக்காமே-என்னை மற்றாெருத்தி தாங்கிப் பிடிக்காமே!-பெத்த (தாயாக்கி) நான் பூஜை புனஸ்காரம் பண்ணாமே ஒரு புண்ணியச் செயலையும் செய்யாமே பேசும் தெய்வம் ஒண்ணு வந்ததடி!-கூடப் பிறக்காத தங்கையாய்ப் போற்றுதடி (தாயாக்கி) என் தெய்வத்தைத் தெய்வமாய்க் கொண்டவளே! பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே! கொய்யாத கனியாக இருந்தவளே!-என் குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே! (தாயாக்கி) அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்! உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்! அழகுமுகம் இது மாறிடலாம்! உன் அன்பு மனம் மாறக் கூடாது! |
ரெளடி ராக்கம்மா -1977
இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 42 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தாயாக்கி