மருதகாசி பாடல்கள் - பக்கம் - 25

பெண்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல கலைகளிற் சிறந்த தையற் கலை! (கண்) ஆண்: பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும் உன்னதமான உருவம் உண்டாக்கும்(கண்) பெண்: படிக்காதவரை பீ.ஏ., எம் ஏ. பட்டதாரி போல் மாற்றிவிடும்!-இது பட்டதாரி போல் மாற்றிவிடும்-புது சட்டைக் கார தொரை யாக்கிவிடும்(கண்) ஆண்: பண்ணை வேலை செய்யும் பெண்ணையும் பாரிஸ் லேடி யாக்கி விடும்-இது பாரிஸ் லேடி யாக்கி விடும்- படித்தவள் போலே காட்டிவிடும்! பெண்: கிழவர்கள் தம்மை குமரர்களாக்கி கிண்ணாரம் போடச் செய்திடுமே! ஆண்: கிழவிகள் தமையும் குமரிகளாக்கி கேலி பேசவும் செய்திடுமே! பெண்: ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட அணியும் மைனர் புஷ் கோட்! ஆண்: இது-ஆடும் ராணி, இன்னிசை வாணி போடும் ஹைனெக் ஜாக்கெட்! பெண்: இது புஷ்கோட்! ஆண்: இது ஜாக்கெட்! இருவரும்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல கலைகளிற் சிறந்த தையற்கலை! மின்னும் துணிகள் பல வகையாலே வித விதமான உடைகள் உண்டாக்கி(கண்) |
சுகம் எங்கே-1954
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 25 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்