மருதகாசி பாடல்கள் - பக்கம் - 20

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை) ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம் ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம் கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம் கழனி யெல்லாம் பொன்னச்சு தங்கமே தங்கம் (தை) கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம் கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம் வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம் வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை) முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம் குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் (தை) |
தை பிறந்தால் வழி பிறக்கும்-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: ஜிக்கி & குழுவினர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 20 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தங்கம், தங்கமே