மருதகாசி பாடல்கள் - பக்கம் - 119

பெண்: பணியிருக்கும் குளிரெடுக்கும்! பால் நிலவின் நிழலிருக்கும் இரவினிலே! ஆண்: இதழ் வெளுக்கும்! விழி சிவக்கும்! இருவரது முகம் வியர்க்கும் உறவினிலே! பெண்: மனதினிலே ஆசைக் கனல் எரியும்! மலரணையில் கருங்குழலும் விரியும்! ஆண்: இனிய காதல் தேன் மழையைச் சொரியும்! இரண்டு நெஞ்சும் இணைந்து இன்பப்போர் புரியும்! பெண்: கைகலந்து மெய்யணைந்து கட்டித் தழுவிக் கொஞ்சும்! ஆண்: கட்டில் மெள்ளி மெள்ள வென்று காதில் சொல்லிக் கெஞ்சும்! பெண்: இருவர் என்னும் இடமும் அங்கே மறையும்! ஆண்: ஒருவர் என்னும் நிழல் படத்தை வரையும்! பெண்: இரவு செல்லும்! ஆண்: பகல் நெருங்கும்! இருவரும்: இதயம் இன்பக் கனவு காணும் உடல் உறங்கும் |
தாயின் மேல் ஆணை-1966
இசை: லிங்கப்பா
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 117 | 118 | 119 | 120 | 121 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 119 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்