நான்மணிக்கடிகை - ஆறாம் நூற்றாண்டு
நான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரிய உண்மைகளைத் தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து இரண்டு உட்பட, இதில் 104 செய்யுட்கள் உள்ளன. வாழ்த்துச்செய்யுட்கள் திருமாலை வாழ்த்துவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் வைணவர் என்பது விளங்கும்.
வெற்றுச்சொல் யாதும் இன்றி ஒவ்வொரு பாட்டிலும் மிக உயர்ந்த வாழ்வியல் உண்மைகள் நான்கினைத் திறம்படத் தொடுத்துக் கூறியுள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது. இதன் சிறந்த பாடல்களில் ஒன்று வருமாறு:
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை, மக்களின் ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு எண்ணக் கடவுளும் இல். |
(கொண்டான் = கணவன்; கேளிர் = உறவினர்; ஒண்மை = சிறப்பு)
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - Nanmanikkatikai - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நான்மணிக்கடிகை, நூற்றாண்டு, ஆறாம், தமிழ்நாட்டுத், இல்லை, நூல்கள், தகவல்கள், இலக்கிய, தமிழ், இதன், | , பாட்டிலும், ஆசிரியர், சிறந்த, nanmanikkatikai, ஒவ்வொரு, கேளிர், நான்கு, literatures, tamil, list, century, information, tamilnadu, உயர்ந்த