இனியவை நாற்பத - ஐந்தாம் நூற்றாண்டு
இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் நாற்பது பாடல்களைக் கொண்டவை எனும் ஒற்றுமையுடன் இனியவை, இன்னாதவை என்பவற்றை ஒன்று கூட்டிச் சொல்லும் தன்மை உடையவை.
வாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாயிற்று. இதன் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானும், திருமாலும், நான்முகனான பிரம்ம தேவனும் வாழ்த்தப்படுகின்றனர்.
இந்நூலின் நான்கு பாடல்கள் மட்டும் (1, 3, 4, 5) நான்கு இனிய பொருள்களைக் கூறுகின்றன. ஏனையவற்றில் மும்மூன்று கருத்துகளே கூறப்பட்டுள்ளன. இந்நூல் திரிகடுகத்தினை அடியொற்றிச்செல்வது என்பர்.
இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர் ஆகும்.
நட்டார்க்கு நல்ல செயல் இனிது (17) மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13) கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (32) |
என்பவை நினைவில் நிறுத்தத்தக்க சில சிறந்த வரிகள். இந்நூலுக்குப் பழைய உரையொன்று உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனியவை நாற்பத - Iniyavai Narpatu - ஐந்தாம் நூற்றாண்டு - 5th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இனியவை, நூற்றாண்டு, நாற்பத, ஐந்தாம், தமிழ்நாட்டுத், தகவல்கள், நூல்கள், இலக்கிய, தமிழ், | , இனிய, நாற்பது, இனிதே, நான்கு, இந்நூலின், கூறும், நாற்பதும், list, narpatu, iniyavai, century, tamil, tamilnadu, literatures, information