மணிமேகலை - இரண்டாம் நூற்றாண்டு
காயசண்டிகை வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று உணர்ந்த உதயகுமரன் அவளை மீண்டும் காணப் போனபோது, அவள் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அப்போது காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவன் கைவாளால் உதயகுமரன் இறக்கிறான். மணிமேலை சிறை செய்யப்பட்டு பல துன்பங்கட்கு ஆளாக்கப்படுகிறாள். அரசமாதேவி செய்த தீமைகளையெல்லாம் தன் தவ வலிமையால் வென்று அவளுக்கு அறிவுரை கூறுகின்றாள். எல்லா உயிர்க்கும் அன்பு செய்யுமாறு அவளுக்கு அறிவுறுத்துகின்றாள்.
பின்னர் ஆபுத்திரன் அரசனாக ஆளும் நாகபுரம் செல்கிறாள். அவனுடன் மணிபல்லவத்திற்கு வருகிறாள். ஓர் ஆண் வடிவம் தாங்குகின்றாள். பல சமயவாதிகளிடம் அவரவர் சமயத் தத்துவங்களையும் கேட்டறிகின்றாள். கச்சி மாநகரில் இருந்த அறவண அடிகளைத் தன் தாயுடன் அடைகிறாள்; அவரை வணங்குகின்றாள். அவர் அவளுக்குப் புத்த தருமத்தைப் போதித்தார். இறுதியாகத் தவ நெறியை மேற்கொண்டு, தன் பிறவிப் பிணி நீங்குமாறு முயல்கின்றாள்.
இக்காவியத்தில் ஆதிரை, ஆபுத்திரன், சுதமதி, விசாகை, மருதி முதலானோர் பற்றிய கிளைக்கதைகளும் உண்டு. இவை மூலக்கதையோடு தொடர்புற்றுக் கதைக்குச் சுவையூட்டுகின்றன.
மணிமேகலையின் மாண்புகள்
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் என்ற பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு.
சமயக் காப்பியம்
தமிழில் தோன்றிய பழைய இலக்கியமான சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது. சிலப்பதிகாரத்தில் பல சமயச் சிந்தனைகள் சொல்லப்பட்டாலும், எச்சமயத்தையும் பரப்பும் நோக்கம் அதன் ஆசிரியர்க்கு இல்லை. ஆனால் மணிமேகலை, பௌத்த சமயத்தைப் பரப்புதலையே முதன்மை நோக்கமாகக் கொண்டது. இத்தகைய சிறப்புப் பெற்ற முதல் நூல் மணிமேகலை.
சமயத் தத்துவம்
சாத்தனார் தம் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த பல்வேறு சமயத் தத்துவ மரபுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மரபுகளாவன சைவம், வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகியனவாகும்.
புத்தபெருமான்
புத்தபெருமான் |
நிலையாமை
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது. சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம் செய்தார்.
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது (மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் : 135 - 138) |
என்பது சாத்தனார் அறிவுரை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Manimekalai - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காப்பியம், மணிமேகலை, நூற்றாண்டு, நிலையாமை, இரண்டாம், தகவல்கள், நில்லா, புத்த, தமிழ்நாட்டுத், சமயத், அறிவுரை, இலக்கிய, தமிழ், நூல்கள், சாத்தனார், சமயச், என்பது, புத்தபெருமான், | , manimekalai, century, காதையும், சமயக், தமிழில், உதயகுமரன், information, tamilnadu, literatures, tamil, அவளுக்கு, list, உண்டு, ஆபுத்திரன், தோன்றிய