சோழர் வரலாறு - விக்கிரம சோழன்
சிற்றரசர் : கல்வெட்டுகளில் சிற்றரசர் சிலர் குறிப்பிடப் பட்டுளர். விக்கிரம சோழன் உலாவிலும் சிலர் குறிக்கப் பட்டுளர். முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்டாரைக் காண்போம். குலோத்துங்கன்பால் பெருஞ்சிறப்புப் பெற்ற நரலோக வீரனின் மகன் ஆன சூரை நாயகன் ஒருவன்[12]. வட ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட சம்புவராயன் ஒருவன். அவன் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் ஆன இராசேந்திர சோழ சாம்புவராயன்’ என்பது. அவன்மனைவி கி.பி. 1123-இல் திருவல்லம் மடத்திற்குச் சில தானங்கள் செய்துள்ளாள்[13]. வழக்கம் போலக் கோவலூரை ஆண்ட சேதிராயர் சிற்றரசராகவே இருந்தனர். தொண்டைநாட்டில் ‘ஆனைவாரி’யைத் தலைநகராகக் கொண்டு ‘சாளுக்கியர்’ என்பவர் ஆண்டு வந்தனர்[14]. தெற்கே இருந்த சிற்றரசருள் பாண்டிநாடு கொண்டான்’ என்பவன் ஒருவன்[15]. இராமநாதபுரம் கோட்டத்துச் ‘சிவபுரியை ஆண்ட ‘சுண்டன் கங்கை கொண்டான், ஒருவன். இவனுக்குத் துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர்[16]. தெலுங்கு நாட்டில் சிற்றரசர் பலராவர். அவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். கி.பி.121-இல் பொத்தப்பி நாட்டை ஆண்டவன் மதுராந்தகன் - பொத்தப்பிச் சோழன் என்பவன். இவன் மகாமண்ட லேசுவரன் - விமலாதித்த தேவன் என்னும் பெயர் பெற்றவன்.இவன் தன்னைக்கரிகாலன் வழிவந்தவன் என்று குறித்துள்ளான்[17]. இப்பொத்தப்பிச் சோழமன்னர்கள் காளத்தியில் உள்ள கோவிற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர். [18]வெலனான்டி இரண்டாம் கொங்கன் ஆன கொங்கயன், ஒருவன். இவன் முன்னோர் சோழப் பேரரசனிடம் உள்ளன்பு கொண்டவர், விக்கிரம சோழனுடன் தென் கலிங்கப் போரில் ஈடுபட்டவர். கொள்ளிப் பாக்கைக்குத் தலைவனான ‘நம்பையன்’ ஒரு சிற்றரசன். காளத்தி நாட்டுப் பகுதியை ஆண்டவன் மகா மண்டலேசுவரன் கட்டிதேவமகாராசன் என்பவன்[19]. இவன் முன்னோர் வீரராசேந்திரன் காலத்தும் உண்மை உடையவராகவே இருந்தனர்.
இனி, விக்கிரம சோழன் உலாவிற் கூறப்பட்டுள்ள சிற்றரசர் யாவர் என்பதைக் காண்போம் : 1. கருணாகரத் தொண்டைமான் முதல்வன். 2. முனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த முனையதரையன் ஒருவன். இவன் தானைத் தலைவன், சிற்றரசன் அமைச்சனுமாவன். 3. கொங்கர், கங்கர், மஹாரதர் என்பவரை வெற்றிகொண்ட ‘சோழர் கோன்’ ஒருவன். 4. போரில் விற்றொழில் பூண்ட சுத்தமல்லன் வானகோவரையன் ஒருவன். 5. நரலோக வீரனான காலிங்கராயன் ஒருவன். 6. செஞ்சியை ஆண்ட காடவராயன் ஒருவன்; இவன் மதங்கொண்ட li_1ÍTöö} @ÖT@ó)[!] அடக்கிச் செலுத்துவதில் வல்லவன். 7. வேள் நாட்டை ஆண்ட சிற்றரசன் ஒருவன்; அவன் துன்பமின்றி நாட்டை அமைதியாக ஆண்டனனாம். 8. கங்கை முதல் குமரி வரை பல அறங்களைச் செய்துள்ள அனந்தபாலன் ஒருவன். இவன் திருவாவடுதுறையில் உள்ள சிவன் கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளான்[20]. 9. கருநாடர் கோட்டை அரண்களை அழித்த சேதியராயன் ஒருவன். 10. தகடுரை ஆண்ட அதிகன் ஒருவன். இவன் கலிங்கப் போரில் பகைவரை முறியடித்தவன். 11. வடமண்ணையில் யானைகொண்டு அழிவு செய்த ‘வத்தவன்’ ஒருவன். 12. கோட்டாற்றிலும் கொல்லத்திலும் வெற்றிபெற்ற நுளம்பபல்லவன் ஒருவன். 13. கொங்கு, குடகு நாடுகளையும் சேரபாண்டியரையும் வென்ற ‘திரிகர்த்தன்’ ஒருவன்.
அரசன் விருதுகள் : விக்கிரம சோழனுக்குப் பிரியமான பெயர் ‘தியாக சமுத்திரன்’ என்பது, இஃது இவன் உலாவிலும் கல்வெட்டுகளிலும் காண்கிறது[21]. அகளங்கன்’ என்பது மற்றொரு பெயர்[22]. ‘குற்றம் அற்றவன்’ என்பது இதற்குப் பொருளாகும். இவன் இவற்றுடன், தன் தந்தையின் விருதுகளில் பலவற்றைக் கொண்டிருந்தான்.
அரச குடும்பம் : பரகேசரி விக்கிரம சோழனுக்கு மனைவியர் எத்துணையர் என்பது தெரியவில்லை. கல்வெட்டுகளில் நால்வர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.ஒருத்தி முக்கோக் கிழான்என்பவள் மற்றவள்தியாகபதாகை என்பவள் முன்னவள் கி.பி.127 வரை கோப்பெருந்தேவியாக இருந்து இறந்தாள்; பிறகு தியாகபதாகை கோப்பெருந்தேவி ஆயினள். [23]இவள் பெண்கட்கு அணிபோன்றவள், சுருண்ட கூந்தலை உடையவள், மடப்பிடி போன்றவள் தூய குணங்களை உடையவள்; திரிபுவனம் முழுதுடையாள் எனப்பட்டவள்; அரசன் திருவுளத்து அருள் முழுவதும் உடையாள், அரசனுடன் வீற்றிருந்து சிறப்புற்றவள் என்று திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகிறது. தரணி முழுதுடையாள் என்பவள் ஒரு மனைவி. அவள் பெண்களில் மயில் போன்றவள் நிலவுலகத்து அருந்ததி, ‘இலக்குமி திருமாலின் மார்பில் இருப்பதுபோல இவள் அரசன் திருவுள்ளத்தில் தங்கியுள்ளாள் என்று அதே கல்வெட்டுக் குறிக்கின்றது.மூன்றாம் மனைவி நம்பிராட்டியார் நேரியன் மாதேவியார் என்பவள். இவளுக்கு அகப்பரிவாரம் இருந்ததென்று கல்வெட்டுக் குறிக்கிறது[24]. ‘அகப்பரிவாரம்’ என்பது ஒவ்வோர் அரசமாதேவிக்கும் இருந்த பணிப்பெண்கள் படையாகும். விக்கிரம சோழனுக்குக் குலோத்துங்கன் என்னும் மைந்தன் ஒருவன் இருந்தான். அவனே இவனுக்குப் பின் சோழப் பேரரசன் ஆனான்.
- ↑ 12. 128 of 1930
- ↑ 13. 322 of 1921
- ↑ 14. 378 of 1913
- ↑ 15. 521 of 1905
- ↑ 16. 47 of 1929</li>
- ↑ 17. 579 of 1907
- ↑ 18. 102 of 1922
- ↑ 19. 155 of 1922
- ↑ 20. 71 of 1926
- ↑ 21. Ula, 431, 662 etc., Ins. 272, 273 of 1907; 49 of 1831
- ↑ 22. Ep. Ind. Vol. 6, pp.227-230
- ↑ 23. S.I.I. Vol.3, p.184
- ↑ 24. 136 of 1895
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விக்கிரம சோழன் - History of Chola - சோழர் வரலாறு - ஒருவன், இவன், ஆண்ட, என்பது, விக்கிரம, நாட்டை, சிற்றரசர், அரசன், சிற்றரசன், என்பவள், கல்வெட்டுக், என்பவன், சோழன், இருந்தனர், பெயர், போரில்