சோழர் வரலாறு - இரண்டாம் இராசராசன்
சிற்றரசர் : இரண்டாம் இராசராசன் காலத்துச்சிற்றரசர் யாவர்?1. மலாடு 2000 என்பதை ஆண்டவன், திருக்கோவ லூரில் பெருமாள் கோவிலைக் கட்டிய நரசிம்மவர்மன் என்பானுக்குப் பெயரன் ஆவன்[4]. 2. அதே மலை நாட்டின் ஒரு பகுதியை ‘மலையமான்கள்’ ஆண்டுவந்தனர். அவருள் ‘மலையமான் பெரிய உடையான்’ ஒருவன், அத்திமல்லன் சொக்கப் பெருமான் ஒருவன், இவன் கிளியூரை ஆண்டவன்[5] 3. கூடலூரை ஆண்ட காடவராயர்’ மரபினன் ஒருவன். அவன் ‘கூடலூர் ஆளப் பிறந்தான் மோகன் என்பவன்.அவனுக்கு இராசராசக் காடவராயன்’ என்ற பெயரும் உண்டு.[6] 4. சோழ நாட்டில் காரிகைகுளத்துரை ஆண்ட பல்லவராயன் ஒருவன். அவன் பல்லவராயன் பேட்டையில் இராசராசேசுவரம் உடையார் கோவில் ஒன்றைக் கட்டினான். அவனே இராசராசன் இறுதிக் காலத்திலும் இராசராசன் இறந்த பிறகும் சோணாட்டை நிலைகுலையாமற் காத்த பெருவீரன்[7]. 5.நித்தவிநோத சாம்புவராயன் என்பவன் செங்கேணித்” தலைவருள் ஒருவன், இவன் மனைவி சீருடையாள் என்பவள். முன்னூர், அச்சரப்பாக்கம் கோவில்களில் திருப்பணி செய்த ‘இராச நாராயண சாம்புவராயன்’ ஒருவன். இவன் ‘அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்றும் வழங்கப்பட்டான்[8]. இச் செங்கேணித் தலைவர்க்கும் காடவராயர்க்கும் நெருங்கிய உறவுண்டு. 6.புதுக்கோட்டைச் சீமையில் குலோத்துங்க சோழக் கடம்பராயன் என்பவன் ஒருவன்[9]. 7. சேந்தன் கூத்தாடுவான்’ என்ற இராசராச வங்கார முத்தரையன் என்பவன் பாடிகாவல் தலைவன் இவன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘திட்டகுடி’யில் இருந்தவன்.[10] 8. தெலுங்கு நாட்டுச் சிற்றரசருள் கரிகாலன் மரபினர் எனக் கூறிக்கொண்ட ‘திரிபுவன மல்ல தேவன் சோழ மகாராசன் ஒருவன்; ஜிக்கிதேவ சோழ மகாராசன் மற்றொருவன். இவரன்றிக் கோணராசேந்திர லோகராசன், கொண்ட பருமட்டி புத்தராசன், குலோத்துங்க இராசேந்திரன் சோடையன், கொட்டாரி எர்ரம நாயகன் சனகவர்மன்’ முதலியோர் நெல்லூர் முதல் வேங்கிவரை பரவி இருந்த சிற்றரசர் ஆவர்.
அரசன் விருதுப் பெயர்கள்: இவன், இராசராசன் உலாவில் கண்டன், வீரதயன், விரோதயன் என்ற பெயர்களை உடையவனாகக் காணப்படுகிறான். உலாவிலும் கல்வெட்டுகளிலும் இவன் சோழேந்திர சிம்மம்’ என்பதைச் சிறப்பாகப் பெற்றவன். இவன், கல்வெட்டுகளில் ‘இராச கம்பீரன், எதிரிலி சோழன், நெறியுடைச் சோழன் என்ற விருதுகளையும் பெற்றுள்ளான்.
அரச குடும்பம் : இராசராசனது பட்டத்தரசி அவனிமுழுதுடையாள் என்பவள். மற்ற மனைவியர் ‘புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள் என்பவர்[11]. இரண்டாம் இராசரர்சனுக்கு மகப்பேறு இல்லை என்பர். இளவரசன் : இராசராசற்கு மகப்பேறு இன்மையால், தன் பாட்டனான விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரனான (இரண்டாம்) இராசாதிராசன் என்பானை இளவரசனாக ஏற்றுக் கொண்டான். இளவரசனது ஆட்சி ஆண்டு கி.பி.1153-இல் தொடக்கமானதைக் கல்வெட்டு உணர்த்துகிறது[12]. எனவே, இராசாதிராசன் பத்தாண்டு வரை இராசராசனுடன் இருந்து அரசியல் முறையை நன்கறிந்தான் என்னலாம். கி.பி.1153-க்குப் பிறகு இராசராசன் இறப்பதற்குள் பாண்டிய நாட்டில் பெருங்குழப்பம் பாண்டிய சிற்றரசர்க்குள் உண்டானது. ஒரு பாண்டியற்கு ஈழத்தரசன் உதவி செய்தான். மற்றொருவருக்கு சோழர் உதவி புரிந்தான். இப்போராட்டச் செய்திகளைப் பற்றிய விவரம் இராசாதிராசன் ஆட்சியில் விளக்கப்படும்.
- ↑ 4. 119 of 1909
- ↑ 5. 163 of 1906, 411 of 1900
- ↑ 6. 166 of 1906
- ↑ 7. 434,435 of 1924
- ↑ 8. 168 of 1918, 52 of 1919, 244 of 1901
- ↑ 9. 355 of 1904
- ↑ 10. 16 of 1903
- ↑ 11. 16 of 1903, 369 of 1911; Vide 219 of 1901, 538 of 1 104 உலகுடை முக்கோக் கிழான் என்பது பட்டத்தரசியைக் குறிப்ப தென்பர்.
- ↑ 12. Ep. Ind. Vol. 9, p.211
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - ஒருவன், இவன், இராசராசன், என்பவன், இராசாதிராசன், இரண்டாம்