விலங்கியல் :: கண்ணறையும் திசுவும்
11. நுண்பிளப்பு என்றால் என்ன?
உட்கரு முதலிய நுண் பொருள்களை நுண்ணோக்கியில் பிளக்கும் நுணுக்கம்.
12. குற்றிழை உயிரிகளில் காணப்படும் இரு உட்கருக்கள் யாவை?
பெருவுட்கரு, சிறுஉட்கரு. எ-டு பரமேசியம்.
13. குறுக்குக்கலப்பு என்றால் என்ன?
குறுக்கு தோன்றுவதன் வாயிலாக அதன்மூலம் ஒருபடித்தான நிறணியன் கருக்களிடையே ஏற்படும் பொருள் பரிமாற்றம். இவ்வரிய நிகழ்ச்சி கண்ணறைப் பிரிவில் நடைபெறுவது.
14. இதனை யார் எவ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்?
இதனைப் புகழ் வாய்ந்த அமெரிக்க உயிரியலார் மார்கன் தாம் செய்த கனி ஈக்கள் வாயிலாக கண்டறிந்தார்.
15. பரிமாற்றக் கலப்பு என்றால் என்ன?
பெற்றோரின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது.
16. திசுவியல் என்றால் என்ன?
திசுக்களை ஆராயுந்துறை.
17. திசு என்றால் என்ன?
குறிப்பிட்ட வேலையைச் செய்யும் கண்ணறைகளின் தொகுதி. ஒரே அமைப்புள்ளது. தூண்டலுக்கேற்ற துலங்களைத் தெரிவிப்பது. எ-டு தசை.
18. நம் உடலிலுள்ள ஐவகை திசுக்கள் யாவை?
1. மேல்படலத்திசு - புறத்தோல், வாய், சுரப்பி.
2. தசைத்திசுகள் - வரித்தசை, வரியில்லாத்தசை
3. தாங்குதிசுகள் - இணைப்புத்திசு, எலும்புத்திசு.
4. நரம்புத்திசு - மூளை நரம்புகள்
5. நீர்மத்திசு - குருதி.
19. திசு வளர்ப்பு என்றால் என்ன?
தகுந்த ஊடகத்தில் கண்ணறைகள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றைப் பேணல்.
20. திசுக்களின் பொதுவான வேலைகள் யாவை?
1. தாங்குதல் அளித்தல்
2. பாதுகாப்பு அளித்தல்
3. இயக்கம் அளித்தல்
4. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்கல்.
5. ஊட்டப்பொருள்களையும், கழிவுகளையும் எடுத்துச் செல்லுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அளித்தல், யாவை