விலங்கியல் :: கண்ணறையும் திசுவும்
21. இணைப்புத்திசு என்றால் என்ன?
தாங்குதல், பாதுகாப்பு, பழுதுபார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழ் உள்ளது.
22. கொழுப்புத்திசு என்றால் என்ன?
திசுக்களில் ஒரு வகை. இதில் வெண் கொழுப்பு அல்லது மாநிறக் கொழுப்பு உண்டு.
23. உயிர்வளிக்குறை என்றால் என்ன?
திசுக்களில் உயிர்வளி இல்லாத நிலை.
24. படலம் என்பது என்ன?
கண்ணறை, உறுப்பு முதலியவற்றைக் சூழ்ந்துள்ள திசு. எ-டு கண்ணறைப்படலம்.
25. படல எலும்பு என்றால் என்ன?
இணைப்புத் திசுவால் உண்டாவது, குருத்தெலும்பு பங்குபெறுவதில்லை.
26. அகவாக்கம் என்றால் என்ன?
புதிய பொருள்கள் முன் கணியத்தில் சேர்வதால் உயிரிகள் வளர்தல்.
27. உறுப்பு என்பது யாது?
பல திசுக்களைக்கொண்ட பகுதி. ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு வேலையுண்டு. எ-டு காது கேட்டல்.
28. உறுப்புகள் என்பவை யாவை?
உயிரணுவிலுள்ள உட்கரு, நுண்குமிழி முதலியவை.
29. மண்டலம் என்பது என்ன?
பல உறுப்புகள் கொண்டது மண்டலம். எ-டு செரித்தல் மண்டலம் - சுரப்பிகள், இரைப்பை, குடல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மண்டலம், என்பது