விலங்கியல் :: கண்ணறையும் திசுவும்

1. கண்ணறை (செல்) என்றால் என்ன?
உயிர்ப்பொருள் நிரம்பியதே கண்ணறை. இது உயிரின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.
2. கண்ணறையிலுள்ள உயிர்ப்பொருள்களுக்கு என்ன பெயர்?
முன் கணியம் (புரோட்டோபிளாசம்).
3. கண்ணறையில் கண்ணறைப் படலத்திற்கும் உட்கருவிற்கும் இடையிலுள்ள பகுதியின் பெயர் என்ன?
கண்ணறைக் கணியம் (சைட்டோபிளாசம்).
4. கண்ணறையின் இன்றியமையாப் பகுதி எது?
உட்கரு.
5. இதிலுள்ள பொருள்கள் யாவை?
நிறப்புரி, மரபணு, டி என் ஏ, ஆர் என் ஏ.
6. தனிக்கண்ணறைகளால் பிரிக்கப்படாத என்பது எதைக் குறிப்பது?
ஒற்றைக் கண்ணறை உயிரி அமீபா.
7. நுண்புரிகள் என்பவை யாவை?
கோல்கை உறுப்பு, அகக் கனிய வலைப்பின்னல் ஆகியவற்றில் துண்டுகள்.
8. மையப்புரி என்றால் என்ன?
நுண்ணிய உருளை வடிவப் பொருள். உட்கருப்படலத்திற்கு வெளியே உள்ளது. இழைப்பிரிவிலும், குன்றல் பிரிவிலும் கதிர் முனைகளை உண்டாக்குவது.
9. கோல்கை அமைப்பு என்றால் என்ன?
விலங்கணுக்களில் மைய உறுப்பைச் சுற்றியுள்ள பொருள். 1898 இல், காமிலோ கோல்கை என்பார் கண்டறிந்தது. செல் சுரப்புக்குக் காரணமானது.
10. தற்சிதைவு என்றால் என்ன?
உயிரணுக்கள் இறந்தபின், அவற்றின் நொதிகளாலேயே அவை அழிக்கப்படுதல்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கோல்கை, கண்ணறை