விலங்கியல் :: உயிரியல் துறைகள்
41. உயிரியல் போர் என்றால் என்ன?
பயிர்களையும் விலங்குகளையும் அழிக்க நோய் உண்டாக்கும் உயிரிகளைப் பயன்படுத்தல்.
42. உயிரியல் வேற்றுமை என்றால் என்ன?
பல வேறுபாடுகளைக் கொண்ட உயிரிகள் இயற்கைச் சமநிலை குலையாது வாழ்தல்.
43. உயிரி ஒழுங்கு என்றால் என்ன?
உயிரியல் தாளமுறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவ நிகழ் மாற்றம் உயிரியல் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ-டு. பகற்பொழுது ஒழுங்கு.
44. உயிரியல் கோலம் என்றால் என்ன?
உயிர்கள் அடங்கிய உலகம். கல்வெளி, காற்றுவெளி, நீர்வெளி ஆகியவை இதில் அடங்கும்.
45. உயிரியல் முன்னறிவிப்பிகள் யாவை?
நில நடுக்கம் முதலிய இயற்கைச் கேடுகளை முன்கூட்டி அறிவித்து, அவ்விடத்தை விட்டு அகலும் விலங்குகள். எ-டு. எலி, பாம்பு, பறவை.
46. உயிரிகளின் சிறப்பியல்புகள் யாவை?
1. முன்கணியம்
2. அளவும் வடிவமும்
3. கட்டமைப்பு
4. உறுத்துணர்ச்சி
5. வளர்சிதைமாற்றம்
6. வளர்ச்சி
7. குறிக்கோளுடைய செயல்
8. இனப்பெருக்கம்
9. சுழல் மாற்றங்கள் இவை உயிரற்ற பொருள்களுக்கு இல்லை.
47. உயிரியலின் புதிய துறைகள் யாவை?
நுண்ணுயிரி இயல், மூலக்கூறு உயிரியல், வானவெளி உயிரியல், உயிரி தொழில் நுட்பவியல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிரியல் துறைகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உயிரியல், என்ன, என்றால், யாவை