விலங்கியல் :: உயிரியல் துறைகள்

31. உயிரியல் இயற்பியல் என்றால் என்ன?
உயிரின் இயற்பியல் பண்புகளை ஆராயுந்துறை.
32. உயிரியல் வேதியியல் என்றால் என்ன?
உயிரின் வேதிப்பண்புக்ளை ஆராயுந்துறை.
33. தகவுப்பாடு அல்லது சரிசெய்துக் கொள்ளுதல் என்றால் என்ன? இதன் நோக்கம் யாது?
தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தக அமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதல்.
34. இதன் வகைகள் யாவை?
1. தனித்தகவுப்பாடு
2. குழுத்தகவுப்பாடு
35. இது எத்துறை சார்ந்தது? எத்துறையில் பயன்படுவது?
உயிரியல்துறை சார்ந்தது. உளவியலில் பயன்படுவது.
36. உயிரியல் வளங்கள் யாவை?
தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள்.
37. உயிரியல் சேர்க்கை என்றால் என்ன?
உயிரிகள் வேதிப்பொருள்களைத் தொகுத்தல்.
38. உயிரியல் ஒளிர்வு என்றால் என்ன?
உயிர்ப்பொருள்களில் உண்டாக்கப்படும் ஒளி.ஆக்ஸிஜன் ஏற்றப்பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருளினால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லுசிபெரஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சி.
39. உயிரியல் கொல்லி என்றால் என்ன?
தீங்குதரும் தாவரம், விலங்கு முதலியவற்றைக் கொல்லும் வேதிப்பொருள். இதில் பூஞ்சைக் கொல்லி முதலியவை
40. உயிரியல் கணிப்பு என்றால் என்ன?
அளவு முறையில் உயிரியல் ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. அய்ட்ரஜன் மதிப்பீடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிரியல் துறைகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உயிரியல், என்ன, என்றால், இதன்