விலங்கியல் :: உயிரியல் துறைகள்
21. புவிவெளி உயிரியல் என்றால் என்ன?
புவிக்கு அப்பாலுள்ள கோள் உயிரிகளை ஆராயுந்துறை. வானவெளி அறிவியல் என்னும் பரந்த அறிவியலோடு தொடர்புடையது.
22. உருவியல் என்றால் என்ன?
ஒர் உயிரியின் உருவத்தை ஆராயுந்துறை. புற உருவியல் அக உருவியல் என இருவகை.
23. பருவ இயல் என்றால் என்ன?
பருவ நிலைகளில் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந் துறை. குறிப்பாகக் பூக்கள் பூத்தல், பறவை முதலியவை இடம் பெயர்தல் ஆகியவைபற்றி ஆராய்வது.
24. நுண்ணுயிரி என்றால் என்ன?
வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத உயிர். எ.டு. அமீபா, கிளமிடோமோனாஸ்.
25. நுண்ணுயிரி இயல் என்றால் என்ன?
நச்சுயிர், குச்சி வடிவ உயிர் ஆகியவற்றை ஆராயுந்துறை.
26. கதிரியல் உயிரியல் என்றால் என்ன?
உயிரிகளில் கதிர்வீச்சின் விளைவுகளை ஆராயுந்துறை உயிரியியலின் பிரிவு.
27. கதிரியல் மரபணுவியல் என்றால் என்ன?
கால்வழியால் கதிர்வீச்சு விளைவுகளை ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு.
28. புவி உயிர்பரவியல் என்றால் என்ன?
இவ்வுலகில் தாவரங்களும் விலங்குகளும் பரவி இருப்பதை ஆராயுந்துறை.
29. உயிரியல் அளவை என்றால் என்ன?
உயிரியலைப் புள்ளி இயல் முறையில் ஆராய்வது.
30. உயிரியல் பயனியல் (பயானிக்ஸ்) என்றால் என்ன?
உயிரியின் செயல்களை ஆராய்ந்து, அவ்வராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிரியல் துறைகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை, உயிரியல், இயல், உருவியல்