மருத்துவம் :: சில நோயியங்கள்
31. விஸ்காட்-ஆல்ட்ரிச் நோயியம் என்றால் என்ன?
நாட்பட்ட தோல்படை, குருதிச்சோகை முதலியவை ஏற்படும். தடுப்பாற்றல் குறை நோய்.
32. பார்க்கின்சன் நோய் என்றால் என்ன?
இது ஒரு நரம்புக் கோளாறு நோய். 40 வயதிற்குப் பின் வருவது. நடுக்கம், தசைவிறைப்பு, இயக்கச்செயல் குறைவு முதலியவை இருக்கும். மறைந்த காங்கிரஸ் தலைவரும் கேரளா ஆளுநருமான இராமச்சந்திரன் அவர்களுக்கு இந்நோய் இருந்தது.
33. பேண்டி நோயியம் என்றால் என்ன?
குருதிச்சோகை இருக்கும். உணவு வழியிலிருந்து அடிக்கடி குருதி கசியும். உயர் குருதியழுத்தத்தால் வெள்ளணுக் குறையும், மண்ணிரல் வீக்கமும் ஏற்படும்.
34. கிலின்பெல்டர் நோயியம் என்றால் என்ன?
மனிதப் பிறவிகளிடத்துக் காணப்படும் நிறப்புரிப் பிறழ்ச்சி. ஒருவர் 2x நிறப்புரிகளையும் ஒரு y நிறப்புரியையும் (x, y) பெற்றிருத்தல். அதாவது, புற முத்திரை நிலையில் நோக்க, ஆண்கள் மலடு. இரண்டாம் நிலைப் பண்புகளை வெளிப்படுத்தலாம்.
35. ஆல்விமர் நோயியம் என்றால் என்ன?
மூளைப்புறணி சிதைதல். இதனால் நினைவாற்றல் நீங்கும். பக்கவாதம் உண்டாகும். பேச இயலாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில நோயியங்கள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நோயியம், நோய்